சென்னை: ஆபரண தங்கத்தின் விலை கடந்த வார தொடக்கத்தில் குறைந்திருந்த நிலையில், வார இறுதியில் சட்டென்று உயர்ந்தது. பொதுவாக தங்கத்தின் விலையானது, சர்வதேச பொருளாதாரச் சூழலின் மத்தியில் கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்தே நிர்ணயம் செய்யப்படுகிறது. தங்கம் விலை நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் உயர்வதால் சாமானிய மக்களுக்கு தங்கம் வாங்குவது கனவாகும் நிலையில் உள்ளது.
கடந்த வெள்ளியன்று தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்கப்பட்ட நிலையில், சனிக்கிழமையன்று 640 ரூபாய் உயர்ந்து ரூ.54,800-க்கு விற்கப்பட்டது. இன்று(மே 20) ஆபரண தங்கத்தின் விலை ரூ.400 உயர்ந்து, ரூ.55200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.