சென்னை: இந்தியர்களின் சேமிப்புத் திட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பது தங்கம். திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும், பரிசாக வழங்குவதற்கும் தங்கம் பெரிதளவில் பயன்படுத்தப்படுவதால், இந்தியர்களிடம் தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆகையால் வெளிநாடுகளில் இருந்து தங்கம் அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது. அதனால் சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
அதன்படி, கடந்த சில நாட்களாகவே உயர்ந்து வரும் தங்கத்தின் விலை இம்மாதத் துவக்கத்தில் ரூ.5 ஆயிரத்து 840க்கு விற்பனையானது. அதனையடுத்து தினமும் உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, உச்சத்தை நோக்கிப் பயணிக்கத் துவங்கியது. கடந்த 10 நாட்களில் மட்டும் கிராமுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாயைக் கடந்துள்ளது.
தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலையால் நகை முதலீட்டாளர்களும், பொதுமக்களும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இன்னும் சில நாட்களின் தங்கத்தின் விலை ரூ.50 ஆயிரத்தைத் தொட்டுவிடும் என்ற அச்சமும் நகைப்பிரியர்களிடையே நிலவி வருகிறது. மேலும், இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 அதிகரித்து, வெள்ளியின் விலை கிராமுக்கு 20 பைசா அதிகரித்தும் காணப்படுகிறது.