சென்னை: இந்திய பொருளாதார மந்தநிலை காரணமாகவும், பண வீக்கம் மற்றும் சர்வதேச அளவிலான பல மாற்றங்கள் காரணமாகவும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது.
இதனால் தங்கம் வாங்குவது என்றாலே சாமனிய மக்கள் மனதில் ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது. தாறுமாறாக உயர்ந்து வரும் தங்கத்தின் விலை, நேற்று (வியாழக்கிழமை) ரூ.53 ஆயிரத்து 800 ஆக விற்பனையான நிலையில், இன்று ஒரு சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.54 ஆயிரத்து 440 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
அந்த வகையில் சென்னையில், இன்று (சனிக்கிழமை) காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்து 805க்கும், ஒரு சவரனுக்கு ரூ.640 அதிகரித்து, சவரன் ரூ.54 ஆயிரத்து 440க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல, வெள்ளி கிராமுக்கு ரூ.1.50 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.90க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.90 ஆயிரமாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (ஏப்ரல் 12):
- 1 கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.6,805
- 1 சவரன் தங்கம் (22கேரட்) - ரூ.54,440
- 1 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.7,424
- 1 சவரன் தங்கம் (24-கேரட்) - ரூ.59,392
- 1 கிராம் வெள்ளி - ரூ.90
- 1 கிலோ வெள்ளி - ரூ.90,000
இதையும் படிங்க: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை: பஞ்சாப் தேர்தலில் களமிறங்கும் சரப்ஜீத் சிங்! - Lok Sabha Election 2024