மும்பை : வரும் பிப்ரவரி 29ஆம் தேதி முதல் வைப்பு தொகை மற்றும் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பேடிஎம் பேமன்ட்ஸ் பேங்க் நிறுவனத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்து உள்ளது. பேடிஎம் பேமன்டஸ் பேங்க் நிறுவனத்தின் தணிக்கை அறிக்கை மற்றும் வெளி தணிக்கையாளர்களின் அறிக்கையில் தொடர்ந்து விதிமுறைகளை மீறியதாக எழுந்த புகாரை அடுத்து இந்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் நிறுவனத்தின் தணிக்கை அறிக்கைகளில் உள்ள விதிமுறை மீறல்களை தொடர்ந்து இந்த நடவடிககி எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி எந்தவொரு வாடிக்கையாளரின் கணக்கிலும் வைப்பு தொகை, பணப்பரிமாற்றம், நிதி சார்ந்த பரிவர்த்தணை, வேலட்டுகள், பாஸ்டேக் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் வரும் பிப்ரவரி 29ஆம் தேதி முதல் தொடர முடியாது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.