மும்பை:வாரத்தின் இரண்டாது நாளான இன்று (ஜூலை.16) வழக்கம் போல் பங்குச்சந்தை தொடங்கின. வர்த்தகம் தொடங்கிய சில மணி நேரத்தில் தேசிய பங்குசந்தை நிப்டியில் வெளிநாட்டு முதலீடுகள் குவியத் தொடங்கின. இதையடுத்து தேசிய பங்குசந்தையின் குறியீடு 63.35 புள்ளிகள் உயர்ந்து இதுவரை இல்லாத அளவாக 24 ஆயிரத்து 650.05 புள்ளிகளை கடந்து வர்த்தகமானது.
அதேபோல் மும்பை பங்குசந்தையான நிப்டியுன் 185.55 புள்ளிகள் உயர்ந்து 80 ஆயிரத்து 580.41 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அந்நியச் செலாவணி முதலீடு அதிகரித்ததன் காரணமாகவே இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து மூன்றாவது நாளாக லாபத்துடன் வர்த்தகமாக காரணம் என பங்குசந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
பாரதி ஏர்டெல், டாடா ஸ்டீல், இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் கணிசமாக விலை உயர்ந்ததால் பங்குசந்தை வெற்றிகரமாக வளர்ச்சிப் பாதையில் செல்லக் காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர். பாரதி ஏர்டெல், இன்போசிஸ் தவிர மகேந்திரா அண்ட் மகேந்திரா, இந்துஸ்தான் யூனிலிவர், டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ், ஐசிஐசிஐ வங்கி, டைடன் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் கணிசமான அளவில் விலை உயர்ந்துள்ளன.
அதேநேரம் பவர் கிரிட், லார்சன் அண்ட் டார்போ (எல்.அண்ட்.டி), கோட்டக் மகேந்திரா வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகிய பங்குகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. கடந்த திங்கட்கிழமை மட்டும் 2 ஆயிரத்து 684 கோடியே 78 லட்ச ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு முதலீடுகள் அந்நிய செலாவணியாக இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் விரைவில் நடைபெற உள்ள அதிபர் தேர்தல், இந்தியாவில் ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் ஆகியனவை பொறுத்து சந்தையில் மாற்றம் ஏற்படும் என பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். இந்திய பங்குச்சந்தை தவிர்த்து ஆசிய அளவில் ஜப்பான் மற்றும் தென் கொரியாவிலும் பங்குச்சந்தை நிலவரம் சீராக இருப்பதாக கூறப்படுகிறது.
அதேநேரம், சீனா மற்றும் ஹாங்காங் பங்குசந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. நடந்து முடிந்த கடைசி காலாண்டில் சீனா வரலாறு காணாத வகையில் பொருளாதார சுணக்கத்தை எதிர்கொண்டுள்ளது. மேலும், தைவானுடனான போர் பதற்றமும் சீன செமிகண்டக்டர் மார்க்கெட்டை சரித்து உள்ளதால் அது கூட அந்நாட்டு பங்குசந்தையில் பிரதிபலிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:பீகார் முன்னாள் அமைச்சரின் தந்தை கொடூரக் கொலை! முன்விரோதம் காரணமா? - Bihar Minister Father Murder