ETV Bharat / business

தீபாவளியை முன்னிட்டு தங்கம் போல் விலை ஏற்றம் கண்ட மதுரை மல்லிகை!

தீபாவளிப் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மலர் வணிக வளாகத்தில் ஒரு கிலோ மதுரை மல்லிகையின் விலை ரூ.1,200ஆக உயர்ந்துள்ளது.

மதுரை மல்லிகை பூக்கள்
மதுரை மல்லிகை பூக்கள் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

மதுரை: தீபாவளிப் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், மக்கள் பூக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த சில நாட்களாக மதுரையில் கனமழை பெய்த காரணமாக மலர் உற்பத்தி குறைந்ததால், மலர்ச் சந்தைக்கு பூக்கள் வரத்தும் குறைந்துள்ளது. அதனால் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மதுரை மல்லிகை கிலோ ரூ.1,200க்கு விற்பனையாகிறது.

மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மலர் வணிக வளாகத்திற்கு நாள்தோறும் வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லூர், பாலமேடு, சத்திரப்பட்டி, கொட்டாம்பட்டி, மேலூர், வலையங்குளம், ஆவியூர், திருமங்கலம், உசிலம்பட்டி என மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல வகையான பூக்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக, இப்பகுதிகளில் விளையும் மதுரை மல்லிகைக்கு தனிச் சிறப்பு உள்ளது.

இதையும் படிங்க: தீபாவளி நாளில் சட்டென குறைந்த பூக்கள் விலை.. கும்பகோணம் மலர் சந்தை வியாபாரிகள் கூறும் காரணம்!

உலக நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும் மதுரை மல்லிகை: இதனால் இந்த மல்லிகை பூக்கள் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா மட்டுமன்றி அண்டை நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், அரபு நாடுகளுக்கும் மதுரையிலிருந்து டன் கணக்கில் மல்லிகை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மதுரை மலர் சந்தையில் விலை விவரம்: இந்நிலையில், நாளை தீபாவளிப் பண்டிகை என்பதால், மதுரை மலர் சந்தையில் மதுரை மல்லிகை கிலோ ரூ.1,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், முல்லை ரூ.1,000, பிச்சி ரூ.800, செவ்வந்தி ரூ.150, ரோஸ் ரூ.150, கனகாம்பரம் ரூ.1,500, செண்டு மல்லி ரூ.100, கோழிக்கொண்டை ரூ.50, அரளி ரூ.400, மெட்ராஸ் மல்லி ரூ.800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முருகன் கூறுகையில், “அண்மையில் பெய்த தொடர் மழை காரணமாக மதுரை மல்லிகை மட்டுமன்றி, அனைத்து மலர்களின் உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது.

இதனால் மலர் சந்தைக்கும் பூக்கள் வரத்து குறைவாகவே உள்ளது. நாளை தீபாவளிப் பண்டிகை என்பதால், மதுரை மல்லிகை விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மழை குறைந்து பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டால் பூக்கள் உற்பத்தியும், வரத்தும் அதிகரிக்கும். வருகின்ற நாட்களில் முகூர்த்த நாட்கள் இருந்தால் மட்டும் பூக்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்புண்டு” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.