சென்னை : மத்திய அரசு, மாநிலங்களுக்கான வரிப் பகிர்வாக ரூ. 1,78,173 கோடியை இன்று விடுவித்துள்ளது. இது வழக்கத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாகும்.
ஜிஎஸ்டி வரி வருவாயை மத்திய அரசு மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கிறது. மாநிலங்களின் மூலதனம் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிடுவதற்காக இந்த தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, மத்திய அரசு ரூ. 1,78,173 கோடியை விடுவித்துள்ளது.
வழக்கமாக மாதாந்திர வரிப்பகிர்வு ரூ. 89,086.50 கோடியாக இருக்கும். ஆனால் தற்போது தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் கூடுதல் வரிப்பகிர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும், வரவிருக்கும் பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த வரிப்பகிர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், 2024 அக்டோபர் மாதத்தில் விடுவிக்கப்பட வேண்டிய வழக்கமான முன்கூட்டிய தவணையும் அடங்கியுள்ளது. விடுவிக்கப்பட்ட தொகையின் மாநில வாரியான விவரம் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 'டெல்லி போனதும் கட்டாயம் பேசுவேன்' ஜிஎஸ்டி கலந்துரையாடலில் நிர்மலா சீதாராமன் உறுதி!
2024 அக்டோபர் மாதத்திற்கான மத்திய வரிகள் மற்றும் தீர்வைகளின் மாநில வாரியான வரிப்பகிர்வு :
வரிசை எண் | மாநிலத்தின் பெயர் | மொத்தம் (கோடி ரூபாயில்) |
1 | ஆந்திரப் பிரதேசம் | 7,211 |
2 | அருணாச்சலப் பிரதேசம் | 3,131 |
3 | அசாம் | 5,573 |
4 | பீகார் | 17,921 |
5 | சத்தீஸ்கர் | 6,070 |
6 | கோவா | 688 |
7 | குஜராத் | 6,197 |
8 | ஹரியானா | 1,947 |
9 | இமாச்சலப் பிரதேசம் | 1,479 |
10 | ஜார்க்கண்ட் | 5,892 |
11 | கர்நாடகா | 6,498 |
12 | கேரளா | 3,430 |
13 | மத்தியப் பிரதேசம் | 13,987 |
14 | மகாராஷ்டிரா | 11,255 |
15 | மணிப்பூர் | 1,276 |
16 | மேகாலயா | 1,367 |
17 | மிசோரம் | 891 |
18 | நாகாலாந்து | 1,014 |
19 | ஒடிசா | 8,068 |
20 | பஞ்சாப் | 3,220 |
21 | ராஜஸ்தான் | 10,737 |
22 | சிக்கிம் | 691 |
23 | தமிழ்நாடு | 7,268 |
24 | தெலங்கானா | 3,745 |
25 | திரிபுரா | 1,261 |
26 | உத்தரப் பிரதேசம் | 31,962 |
27 | உத்தராகண்ட் | 1,992 |
28 | மேற்கு வங்கம் | 13,404 |
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்