ஹைதராபாத்:விடுதியில் நாயை துரத்திய நபர் கவனக்குறைவாக விடுதியின் மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து சந்தா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் விசாரணையில், ஆந்திரப் பிரதேசம் மாநிலம் தெனாலி பகுதியைச் சேர்ந்தவர் உதய் (23). இவர் ஹைதராபாத்தில் உள்ள ராமசந்திரபுரம் அசோக்நகர் பகுதியில் வசித்து வருகிறார். இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்.20) அவரது நண்பர்களுடன் சாந்தா நகரில் உள்ள தனியார் ஹோட்டலுக்குச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க:நெல்லை நீட் அகாடமி விவகாரம்; புகார் அளிக்காமலேயே நடவடிக்கை சாத்தியமானது எப்படி? சட்டம் கூறுவது என்ன?
அங்கு, ஹோட்டலின் மூன்றாவது மாடியின் பால்கனியில் உதய் நடந்து கொண்டிருந்தபோது, அங்கு நாய் ஒன்று வந்துள்ளதை பார்த்துள்ளார். இதனையடுத்து, உதய் அந்த நாயை துரத்தியுள்ளார். அப்போது நாயை வேகமாக துரத்தி சென்ற நிலையில், நிலை தடுமாறி மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே உதய் உயிரிழந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை உதய் உயிரிழந்த நிலையில் ஹோட்டல் நிர்வாகம் இதுகுறித்த தகவலை தெரிவிக்காமல் இருந்துள்ளது. தற்போது இச்சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து சந்தா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உதய் நாயை விரட்டி சென்று உயிரிழந்துள்ள சம்பவம் ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்