தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அமேதி தொகுதியில் மீண்டும் ராகுல் காந்தி போட்டி? என்ன சொல்கிறார் ராகுல்? - Lok sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது தொடர்பாக கட்சித் தலைமையின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு செயல்படுவேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 17, 2024, 1:44 PM IST

காசியாபாத் :உத்தர பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கூட்டாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஈடுபட்டனர். அப்போது அமேதி தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்து பேசிய ராகுல் காந்தி, "அமேதி தொகுதியை பொறுத்தவரை கட்சி மேலிடம் முடிவு எடுக்கும். கட்சித் தலைமையிடம் இருந்து எனக்கு என்ன உத்தரவு வருகிறதோ, அதை நான் கடைபிடிப்பேன். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை மக்களவை தேர்தல் தொடர்பான அனைத்து முடிவுகளும் காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டத்தில் எடுக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி மற்றும் ரேபரலி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை வெளியிடாமல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது. இதில் அமேதி தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி மீண்டும் களம் காணுவர் எனக் கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் ரேபரலியில் பிரியங்கா காந்தி போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை சோனியா காந்தி அங்கு போட்டியிட்டு வெற்றி பெற்று வந்ஹ நிலையில், இந்த முறை அவர் மாநிலங்களவைக்கு தேர்வானார். இதன் காரணமாக ரேபரலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற கேள்வி எழுந்து உள்ளது.

அதேநேரம் அமேதி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர் வதேரா விருப்பம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனால் அமேதி தொகுதியில் காங்கிரஸ் மற்றும் பாஜக தரப்பில் யார் களமிறக்கப்பட உள்ளார்கள் என்பது உச்சக்கட்ட பரபரப்பாக காணப்படுகிறது.

மக்களவை தேர்தலில் கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் இருந்து ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்றத்திற்கு போட்டியிடுகிறார். கடந்த 2019ஆம் ஆண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு ராகுல் காந்தி வெற்றி பெற்றார். வயநாடு தொகுதியில் ஏப்ரல் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

அதேநேரம் அமேதி தொகுதியில் மே 20ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளம. ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜூன் 1ஆம் தேதி 7வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ளதால் இன்று (ஏப்.17) மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வடைகிறது. தேர்தல் பாதுகாப்பு கருதி மதுபான கடைகள், பட்டாசு ஆலைகள் தொடர்ந்து 48 மணி நேரத்திற்கு மூட உத்தரவிடப்பட்டு உள்ளன. மாலை 5 மணிக்கு மேல் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

இதையும் படிங்க :காங்கிரஸ் குறித்து அவதூறு கருத்து - தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கேசிஆர்-க்கு நோட்டீஸ்! - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details