தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வயநாடு இடைத்தேர்தல்: வாக்குப்பதிவில் ராகுலை நெருங்காத பிரியங்கா; மக்கள் யார் பக்கம்?

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியிலும், செலக்கரா சட்டப்பேரவைத் தொகுதியிலும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. இதில், கடந்த முறை ராகுல் காந்தி போட்டியிட்டபோது பதிவான வாக்குகளை விட இம்முறை மிகவும் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளன.

வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள்
வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 13, 2024, 7:49 AM IST

வயநாடு / கேரளா: அண்டை மாநிலமான கேரளாவில் இன்று வயநாடு மக்களவைத் தொகுதிக்கும், செலக்கரா சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. இதில், நாட்டு மக்களால் மக்களவைத் தேர்தல் உற்று கவனிக்கப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் இங்கு களம் இறக்கப்பட்டுள்ள நட்சத்திர வேட்பாளர்கள் தான். முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் (இண்டி கூட்டணி) கட்சி சார்பில் ராகுல் காந்தி ரேபரேலி, வயநாடு ஆகிய இரு இடங்களில் போட்டியிட்டார்.

இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றிப்பெற்ற அவர், வயநாடு மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், வயநாடு மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், இம்முறை ராகுல் காந்தியின் தங்கை பிரியங்கா காந்தி வயநாடு மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவருக்குப் போட்டியாக மாநிலத்தை ஆளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சத்யன் மொகேரி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் ஆகியோர் களம்காண்கின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி (IANS)

கூட்டணியில் இண்டி (INDI Alliance) ஒரு பகுதியாக இருந்தாலும், இது பிரியங்காவுக்கு எதிரான அரசியல் போராட்டம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எல்.டி.எஃப்) பலமுறை கூறியுள்ளது. பா.ஜ.க மோடி அரசின் கொள்கைகளை விமர்சித்தே பிரியங்கா காந்தி, சத்யன் மொகேரி ஆகியோரின் பரப்புரைகள் அமைந்தன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சத்யன் மொகேரி (Facebook)

ஆனால், பா.ஜ.க பிரியங்கா காந்தியை சுற்றுலாப் பயணி என வர்ணனை செய்து பரப்புரை தாக்குதலை நடத்தியது. இந்த தொகுதியில் நட்சத்திர வேட்பாளர்கள் களம் கண்டுள்ளதால், நாடே இந்த தேர்தலை உற்று கவனிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் (Facebook)

வயநாடு தேர்தல் மற்றும் முடிவுகள் வெளியாகும் நாள்:

இன்று (நவம்பர் 13) காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிவரை மக்கள் தங்கள் வாக்கினை பதிவுசெய்யலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், நவம்பர் 23 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றியாளர் அறிவிக்கப்பகிறார்.

வாக்காளர்கள் எண்ணிக்கை:

வயநாடு மக்களவைத் தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 71 ஆயிரத்து 742 வாக்காளர்கள் (14,71,742) இருக்கின்றனர். மூன்று பிரதானக் கட்சிகள் உள்பட 16 வேட்பாளர்கள் இந்த இடைத்தேர்தலில் களம்காண்கின்றனர். மொத்தம் 1,354 வாக்குச் சாவடிகள் மக்கள் வாக்களிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க
  1. வயநாடு மக்களவை இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தியின் தேர்தல் வியூகம் பலிக்குமா?
  2. ஓய்ந்தது பிரச்சாரம்.. ஜார்க்கண்டில் முதற்கட்ட தேர்தல்!
  3. நீட் தேர்வு பயிற்சி: 12ஆம் வகுப்பு மாணவி விடுதி அறையில் உயிரை மாய்த்துக்கொண்ட சோகம்..!

வேறு எங்கெல்லாம் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது?

அசாம், பீகார், சத்தீஸ்கர், குஜராத், கர்நாடகம், கேரளா, மத்திய பிரதேசம், மேகாலயா, ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் 31 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று (நவம்பர் 13) இடைத்தேர்தல் நடக்கிறது.

வயநாட்டில் எத்தனை சதவிகிதம் வாக்குகள் பதிவானது?

வயநாடு மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு சதவீதம் வெகுவாகக் குறைந்துள்ளது. மொத்தம் 64.71 விழுக்காடு வாக்குகள் இங்கு பதிவாகியுள்ளன. இது முந்தைய தேர்தலில் பதிவான வாக்குகளை விட 8 விழுக்காடு குறைவாகும். 2024 ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் 74% வாக்குகள் பதிவாகி, ராகுல் காந்தி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். 2019 மக்களவைத் தேர்தலில் வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிட்டபோது வாக்குப்பதிவு வீதம் 80 விழுக்காட்டிற்கும் மேல் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது பிரியங்கா காந்தி வேட்பாளராக போட்டியிட்ட வயநாடு மக்களவைத் தொகுதியில் 64.71% வாக்குகள் பதிவாகியுள்ளது சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.

வாக்குப்பதிவு முடிந்த 8 மணி நேரத்துக்குப் பிறகும் 50 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்ததையடுத்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி 64.71 சதவீகித வாக்குகள் பதிவாகியிருந்தன.

தொகுதியில் உள்ள 14,71,742 வாக்காளர்களில் 9,52,448 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். திருவம்பாடியில் 66.39% (1,84,808 பேரில் 1,22,705), கல்பட்டாவில் 65.42% (2,10,760 பேரில் 1,37,899), வந்தூரில் 64.43% (2,34,228 பேரில் 1,50,917), மானந்தவாடியில் 63.89% (1,29,208 வாக்குகள்), 62.66% (2,27,489 பேரில் 1,42,562 வாக்குகள்) மற்றும் நீலம்பூரில் 61.91% (2,26,541 பேரில் 1,40,273) வாக்குகள் பதிவாகியுள்ளன. பழங்குடியின மற்றும் தோட்டப் பகுதிகளில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைவாக இருந்துள்ளது.

மாறுபட்ட பரப்புரைகளை மேற்கொண்டு தற்போது ஓய்விலிருக்கும் வேட்பாளர்களில் யாரை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதை பார்க்க நவம்பர் 23 வரை நாம் காத்திருக்க வேண்டும்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்.

ABOUT THE AUTHOR

...view details