தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கூடுதல் வரதட்சனை கேட்ட மணமகன் வீட்டார் சிறைபிடிப்பு! ரூ.20 லட்சம் வசூல் செய்த பெண் வீட்டார்! என்ன நடந்தது? - Uttarakhand marriage ruckus - UTTARAKHAND MARRIAGE RUCKUS

உத்தரகாண்டில் 10 லட்ச ரூபாய் வரதட்சனை போக 15 பிக்கா நிலம் கேட்டு தராத ஆத்திரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டாரை சிறை பிடித்து 20 லட்ச ரூபாய் அபராதத் தொகையாக பெண் வீட்டார் வசூலித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 26, 2024, 7:30 PM IST

ரூர்க்கி: உத்தரகாண்ட் மாநிலம் மங்ளோர் கோட்வாலி பகுதியைச் சேர்ந்த இளைஞரும், பக்வன்பூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்து உள்ளனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்த நிலையில் அது குறித்து வீட்டில் தெரிவித்து உள்ளனர். இதில் பெண் தனது சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தால், தனது அத்தை மட்டும் மாமா வீட்டில் வசித்து வந்து உள்ளார்.

இரு வீட்டினரும் திருமணத்திற்கு சம்மதித்த நிலையில், மணப்பெண் வீட்டார் சார்பில் மணமகனுக்கு 10 லட்ச ரூபாய் வரதட்சனை கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை கொண்டு மணமகன் வீட்டார் மாருதி சிப்ட் கார் வாங்கி உள்ளனர். மேலும் பல்வேறு பரிசுப் பொருட்கள் மணப் பெண் வீட்டார் சார்பில் வழங்கப்பட்டு உள்ளது.

இதில் தங்களுக்கு பிடித்தம் இல்லாத பொருட்களை திருப்பி வழங்கி வேறு பரிசுப் பொருட்களையும் மணமகன் வீட்டார் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருமண நாளில் மேலும் 15 பிக்கா நிலம் வரதட்சனையாக வழங்குமாறு மணமகன் வீட்டார் கேட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு பெண் வீட்டார் மறுப்பு தெரிவித்து உள்ளனர். இதில் அதிருப்தி அடைந்த மணமகன் வீட்டார், பெண் வீட்டார் குறித்து அவதூறு வார்த்தைகளால் வசைபாடியதாக கூறப்படுகிறது. இதில் இரு வீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், மணமகன் வீட்டார் திருமணத்தை முறித்துக் கொள்வதாக தெரிவித்து விட்டு வெளியேற தொடங்கினர்.

இதில் அதிருப்தி அடைந்த பெண் வீட்டார், மணமகனின் தந்தையை பிடித்து கட்டி வைத்தனர். இதனால் இரு தர்ப்பினருக்கு இடையே கைகலப்பு ஏற்படும் சூழல் நிலவியது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து திருமணத்திற்கான செலவு 20 லட்ச ரூபாயை திருப்பிச் செலுத்தினால் மணமகனின் தந்தையை விடுவதாக பெண் வீட்டார் தெரிவித்து உள்ளனர். நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் மணமகன் வீட்டார் 20 லட்ச ரூபாய் பணம் செலுத்தியதை அடுத்து மணமகனின் தந்தையை விடுத்த பெண் வீட்டார், அவர்கள் கிராமத்தை விட்டு வெளியேற அனுமதித்தனர்.

இதையும் படிங்க :2ஆம் கட்ட மக்களவை தேர்தல்: கேரளாவில் மூக்கு மூலம் வாக்களித்த மாற்றுத்திறனாளி இளைஞர்! - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details