புதுடெல்லி:அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றியை எதிர்நோக்கி உள்ள குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்புக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா -அமெரிக்கா இடையேயான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த இரு நாடுகளின் ஒத்துழைப்பு புதுப்பிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன் என்று மோடி தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஒட்டுமொத்த உலகமே ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இத்தேர்தலில் அமெரிக்க முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியும் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் இன்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'அமெரிக்க அதிபர் தேர்தலில் வரலாற்று வெற்றியை பெற்றுள்ள எனதருமை நண்பர் டொனால்ட் டிரம்புக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். உங்களுடையை முந்தைய ஆட்சியின் வெற்றிகளை தொடரும்போது, இந்தியா - அமெரிக்கா இடையேயான உலகளாவிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு புதுப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன்.