ETV Bharat / bharat

ஐஎஸ்பி கல்வி நிறுவனத்துக்கு ரூ.30 கோடி நன்கொடை அளித்த ராமோஜி அறக்கட்டளை! - RAMOJI FOUNDATION

ஹைதராபாத்தில் உள்ள தங்களது பள்ளியின் கட்டமைப்பு வளர்ச்சிக்கு ரமோஜி அறக்கட்டளை ரூ.30 கோடி நன்கொடை (சிஎஸ்ஆர் நிதி) அளித்துள்ளதாக இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாற்ற நிகழ்வில் செருகுரி. கிரோன், அறங்காவலர், ராமோஜி அறக்கட்டளை (இடமிருந்து இரண்டாவது), மற்றும் ஹரிஷ் மன்வானி, தலைவர், ஐஎஸ்பி நிர்வாகக் குழு (மையம்), உடன் (இடமிருந்து வலமாக ) சைலஜா கிரோன், நிர்வாக இயக்குநர், மார்கதர்சி சிட் ஃபண்ட் பிரைவேட் லிமிடெட், பேராசிரியர் மதன் பில்லுட்லா, டீன், ஐஎஸ்பி, மற்றும் ஐஎஸ்பி, அட்வான்ஸ்மென்ட்,மூத்த இயக்குநர் டிஎன்வி குமரகுரு ஆகியோர்
புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாற்ற நிகழ்வில் செருகுரி. கிரோன், அறங்காவலர், ராமோஜி அறக்கட்டளை (இடமிருந்து இரண்டாவது), மற்றும் ஹரிஷ் மன்வானி, தலைவர், ஐஎஸ்பி நிர்வாகக் குழு (மையம்), உடன் (இடமிருந்து வலமாக ) சைலஜா கிரோன், நிர்வாக இயக்குநர், மார்கதர்சி சிட் ஃபண்ட் பிரைவேட் லிமிடெட், பேராசிரியர் மதன் பில்லுட்லா, டீன், ஐஎஸ்பி, மற்றும் ஐஎஸ்பி, அட்வான்ஸ்மென்ட்,மூத்த இயக்குநர் டிஎன்வி குமரகுரு ஆகியோர் (Image credits-Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 21, 2024, 9:17 PM IST

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள தங்களது பள்ளியின் கட்டமைப்பு வளர்ச்சிக்கு ரமோஜி அறக்கட்டளை ரூ.30 கோடி நன்கொடை அளித்துள்ளதாக இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் (ஐஎஸ்பி) நிறுவன நிர்வாகம் அறிவித்துள்ளது. பெருநிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு (CSR) திட்டத்தின்கீழ் இந்த நிதி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஐஎஸ்பி நிறுவனம் கூறியுள்ளது.

புதிதாக கட்டப்பட உள்ள நிர்வாக மையத்தின் ஒரு பகுதியாக 430 பேர் அமரக்கூடிய அதிநவீன ஆடிட்டோரியம் கட்டுமானப் பணிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பெருந்தன்மையான நன்கொடையாக இந்த நிதி பெறப்பட்டுள்ளது. இந்த கட்டடம் நிறைவு பெற்றால், சர்வதேச கருத்தரங்கு, ஆராய்ச்சி கருத்தரங்குகள், புகழ்பெற்ற விரிவுரைகள் மற்றும் பிற முக்கிய கல்வி நிகழ்வுகள் நடத்தும் வகையில் கல்வி நிறுவனத்தின் திறன் அதிகரிக்கும்.

இந்த நன்கொடையை அங்கீகரிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்துள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ்(ஐஎஸ்பி) போர்டின் தலைவர் ஹரிஷ் மன்வானி, "கற்றல் மற்றும் ஆராய்ச்சிக்கான உலகத் தரம் வாய்ந்த நிறுவனம் என்ற அதன் நோக்கத்துக்கு உண்மையாக இருக்க ஐஎஸ்பி-யின் திறனில் நமது நன்கொடையாளர்கள் பெரும்பகுதி முக்கியப் பங்காற்றியுள்ளனர்.ராமோஜி அறக்கட்டளையின் இந்த பங்களிப்புக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், இந்த முயற்சியில் உயர்மட்ட உள்கட்டமைப்பை நிலைநிறுத்துவதில் ஐஎஸ்பி நீண்ட தூரம் பயணிக்கும்,"என்றார்.

ஐஎஸ்பி கல்வி நிறுவனத்தின் ஹைதராபாத் வளாகத்தில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாற்ற நிகழ்வில், நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் மூத்த தலைவர்களுடன் ராமோஜி குடும்ப உறுப்பினர்கள்.
ஐஎஸ்பி கல்வி நிறுவனத்தின் ஹைதராபாத் வளாகத்தில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாற்ற நிகழ்வில், நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் மூத்த தலைவர்களுடன் ராமோஜி குடும்ப உறுப்பினர்கள். (Image credits-Etv Bharat)

ஐஎஸ்பியின் வளர்ச்சியில் அதன் தொண்டின் பங்கு மற்றும் நன்கொடையை ஏற்றுக் கொள்வது குறித்து பேசிய அதன் முதல்வர் மதன் பில்லுட்ல, "ஐஎஸ்பியின் வரலாறு தொண்டின் ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த நன்கொடை பள்ளியின் வளர்ச்சிக்கு உதவும். ராமோஜி அறக்கட்டளையின் தாராளமான நன்கொடை பள்ளியின் வளர்ச்சிக்கு கணிசமாக உதவும் மற்றும் உலகத்தரம் வாய்ந்த கற்றல் அனுபவங்களை நாங்கள் தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்யும்,"என்றார்.

நன்கொடை வழங்கிய பின்னர் உரையாற்றிய ராமோஜி அறக்கட்டளையின் அறங்காவலர் செருகுரி.கிரோன், "நாட்டின் அனைத்து மட்டங்களிலும் தரமான கல்வியை வளர்ப்பதில் ஸ்ரீ ராமோஜி ராவின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டினார். மேலும் பேசிய அவர், "இந்த நன்கொடை, கல்வி சார்ந்த விவாதங்களுக்கும் அறிவுப் பரிமாற்றத்திற்கும் மையப் புள்ளியாக இருக்கும் ஆடிட்டோரியம் உட்பட. உலகத் தரம் வாய்ந்த வசதிகளை மேலும் மேம்படுத்துவதில் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸுக்கு உதவுகிறது. இதன் மூலம் ராமோஜி ராவ் அவர்களின் நினைவைப் போற்றவும் உதவுகிறது. இது ஒரு வலுவான பொருளாதாரம் மற்றும் உலகத் தரம் வாய்ந்த பாரதத்தை உருவாக்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம், இதனால் உலகளாவிய பிசினஸ் கல்வி நிறுவனமாக ஐஎஸ்பியை நிலைநிறுத்துவதற்கு இது ஒரு நீடித்த சான்றாக விளங்குகிறது,"என்றார்.

ஐஎஸ்பி: இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் (ஐஎஸ்பி) என்பது உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட வணிகப் பள்ளியாகும், இது அதன் ஹைதராபாத் மற்றும் மொஹாலி வளாகங்களில் புதுமையான மேலாண்மைக் கல்வியை வழங்குகிறது. சிறந்த உலகளாவிய வணிகப் பள்ளிகளில் தரவரிசையில், ஐஎஸ்பி முதன்மையான முதுகலை மேலாண்மை திட்டம், நிர்வாகக் கல்வி மற்றும் முனைவர் படிப்புகள் உள்ளிட்ட திட்டங்களை வழங்குகிறது.அதன் உலகத் தரம் வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் வழிநடத்தும் தலைமையின் மூலம், உலகளாவிய வணிகத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்யும் தலைவர்களை உருவாக்குவதற்கு ஐஎஸ்பி அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுகிறது.

ராமோஜி அறக்கட்டளை: ராமோஜி அறக்கட்டளை என்பது ராமோஜி குழுமத்தால் முன்னெடுக்கப்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட அறக்கட்டளை ஆகும். இந்த அறக்கட்டளை, 2012 இல் நிறுவப்பட்டது, குழுவின் சார்பாக கல்வி, திறன் மேம்பாடு, அனாதை இல்லங்கள், கிராமப்புற மேம்பாடு, சுகாதாரம் மற்றும் விளையாட்டுப் பயிற்சி மற்றும் மேம்பாடு ஆகிய துறைகளில்.தொண்டு செயல்பாடுகள் மற்றும் சிஎஸ்ஆர் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எல்வி பிரசாத் கண் மருத்துவ மையம், ஜீனோம் அறக்கட்டளை, அக்ஷயபாத்ரா, பசவதாரகம் புற்றுநோய் அறக்கட்டளை போன்றவற்றுக்கு அறக்கட்டளை குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.