தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

sugarcane FRP hike: கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையில் குவிண்டாலுக்கு 25 ரூபாய் உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 21, 2024, 10:52 PM IST

Updated : Feb 22, 2024, 12:12 PM IST

டெல்லி : கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையில் குவிண்டாலுக்கு 25 ரூபாய் உயர்த்தி மொத்தம் குவிண்டாலுக்கு 340 ரூபாய் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டத்தில் எதிர்வரும் 2024-25 கரும்பு பருவத்திற்கு குவிண்டாலுக்கு ஆதார விலையாக 10 புள்ளி 25 சதவீதம் உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு 25 ரூபாய் அதிகரிக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. எனவே, இதுவரை இல்லாத வகையில், கரும்புக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு 340 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வரும் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க :காங்கிரஸ் - சமாஜ்வாதி தொகுதி பங்கீடு இறுதி! எத்தனை இடங்களில் காங்கிரஸ் போட்டி தெரியுமா?

Last Updated : Feb 22, 2024, 12:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details