தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Budget 2024 highlights: வரி விதிப்பில் எந்த மாற்றமும் இல்லை.. பெண்களுக்கு தடுப்பூசி உள்ளிட்ட பட்ஜெட் முக்கிய தகவல்கள்! - வந்தே பாரத் ரயில்

nirmala
nirmala

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 1, 2024, 9:57 AM IST

Updated : Feb 1, 2024, 12:13 PM IST

11:55 February 01

வரி விதிப்பில் மாற்றமில்லை

நேரடி மற்றும் மறைமுக வரி முறையில் எந்த மாற்றமும் இல்லை: அமைச்சர் நிதியமைச்சர்

11:53 February 01

500 பில்லியன் டாலர் அந்நிய முதலீடு

கடந்த 10 ஆண்டுகளில் 500 பில்லியன் டாலருக்கு அதிகமான அந்நிய முதலீடு இந்தியாவிற்குள் வந்துள்ளதாக அமைச்சர் தகவல்

11:52 February 01

ஆன்மீக சுற்றுலா திட்டங்கள்

சுற்றுலாத்துறையில் ஆன்மீக சுற்றுலாவிற்கான பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்: அமைச்சர்

11:49 February 01

40,000 வந்தே பாரத் ரயில் பெட்டிகள்..

40 ஆயிரம் சாதாரண ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் திட்ட பெட்டிகளாக மாற்றப்படும்: அமைச்சர்

11:47 February 01

"ஜூலையில் முழு பட்ஜெட் தாக்கல் செய்வோம்"

நாடு முழுவதும் சாலை விரிவாக்க திட்டம் தொடர்பாக ஜூலை மாதம் விரிவான திட்டம் மற்றும் பட்ஜெட் விவரங்களை தாக்கல் செய்வோம்: நிர்மலா

11:46 February 01

ஏற்றுமதி வளர்ச்சி இருமடங்கு உயர்வு

கடந்த 10 ஆண்டுகளில் ஏற்றுமதி வளர்ச்சி இருமடங்காக அதிகரித்துள்ளது: அமைச்சர் நிர்மலா

11:45 February 01

லட்சத்தீவில் சுற்றுலா உட்கட்டமைப்பு

லட்சத்தீவில் சுற்றுலா உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் நிர்மலா சீதாராமன்

11:43 February 01

விமான நிலையங்கள் 149 ஆக அதிகரிப்பு

நாடு முழுவதும் விமான நிலையங்களின் எண்ணிக்கை 149ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது: அமைச்சர்

11:42 February 01

மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கு மெட்ரோ ரயில் சேவை கொண்டுவரப்படும்: அமைச்சர்

11:38 February 01

பெண்கள் உயர்கல்வி உயர்வு

பெண்கள் உயர்கல்வி பயில்வது 28 விழுக்காடு அதிகரித்துள்ளது: அமைச்சர்

11:37 February 01

ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி

ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

11:33 February 01

கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க பெண்களுக்கு தடுப்பூசி

கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க 9 முதல் 18 வயதுள்ள பெண்களுக்கு தடுப்பூசி: அமைச்சர்

11:30 February 01

மருத்துவ கல்லூரிகளை அதிகரிக்க குழு

நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளை அதிகரிப்பது தொடர்பாக குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர்

11:28 February 01

சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம்

வீட்டின் மொட்டை மாடியில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம்: நிர்மலா சீதாராமன்

11:26 February 01

பெண்களுக்கு ரூ.30 கோடி முத்ரா கடன்

"தொழில்கள் தொடங்க பெண்களுக்கு ரூ.30 கோடி அளவில் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்பட்டுள்ளது"

11:24 February 01

"70% பெண்களுக்கு வீடு"

பிரதான் மந்திரி வீடு கட்டும் திட்டம் கீழ் 70 விழுக்காடு பெண்களுக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர்

11:23 February 01

"2027ல் வளர்ச்சியடைந்த இந்தியா"

2027ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவு நனவாகும்: அமைச்சர் நிர்மலா சீதாராமன்

11:20 February 01

1.1 கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

நாடு முழுவதும் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் 1.1 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர்

11:19 February 01

பிரதான் மந்திரி காப்பீடு மூலம் 4 கோடி விவசாயிகள் பயன்

பிரதம மந்திரி காப்பீடு திட்டத்தின் மூலம் 4 கோடி விவசாயிகள் பயன்பெற்றுள்ளதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

11:16 February 01

பட்ஜெட் உரையில் பிரக்ஞானந்தாவுக்கு புகழாரம்

மத்திய பட்ஜெட் உரையில் தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை புகழ்ந்த அமைச்சர் நிர்மலா சிதாராமன்

11:09 February 01

25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்பு

கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மத்திய அரசு மீட்டுள்ளது: அமைச்சர்

11:07 February 01

10 ஆண்டுகளில் வரலாறு காணாத வளர்ச்சி

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா வரலாறு காணாத வளர்ச்சி அடைந்துள்ளது: நிர்மலா சீதாராமன்

11:07 February 01

பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 6ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து தனது உரையை தொடங்கினார்.

10:55 February 01

பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் - சற்று நேரத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கலாகிறது..

இன்று தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. சற்று நேரத்தில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்

10:13 February 01

மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

மத்திய இடைக்கால பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்க அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

10:01 February 01

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்து 47,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

09:57 February 01

பட்ஜெட் ஆவணங்கள் நாடாளுமன்றம் வருகை

மத்திய இடைக்கால பட்ஜெட் ஆவணங்களை சரக்கு வாகனத்தில் பாதுகாப்பாக நாடாளுமன்ற வளாகத்திற்கு எடுத்து வந்த பாதுகாப்பு படையினர்

09:55 February 01

குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து புறப்பட்ட நிர்மலா

பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுடன் வாழ்த்து பெற்ற பிறகு நாடாளுமன்றம் புறப்பட்டார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்

09:45 February 01

மத்திய இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்

மத்திய இடைக்கால பட்ஜெட்டை இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Last Updated : Feb 1, 2024, 12:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details