பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பரமேஷ் என்பவர் 42 பெங்களூரு பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 3 அன்று சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்கள் உடன் ஒப்பிட்டு பேசியிருந்தார்.
இவ்வாறான உதயநிதியின் பேச்சு சமூகத்தில் அமைதியின்மையையும், கிளர்ச்சியையும் தூண்டுவதாகத் தெரிகிறது. இதனைப் படித்தவர்கள் எனது மதத்திற்கு எதிராகப் பேசினார்கள். இது எனது மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. எனவே, உதயநிதி ஸ்டாலின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரி இருந்தார்.