விஜயபுரா :கர்நாடக மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவனை மீட்கும் பணியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் பீஜாபூர் மாவட்டம் இண்டி தாலுகாவில் உள்ள லச்சியனா கிராமத்தை சேர்ந்தவர்கள் சதீஷ் முஜகொண்டா - பூஜா முஜகொண்டா தம்பதியினர். இவர்களது இரண்டு வயது சாத்விக் முஜகொண்டா.
தனது 4 ஏக்கர் தோட்டத்தில் கரும்பு மற்றும் எலுமிச்சை சாகுபடி செய்து உள்ள சதீஷ் அதற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக ஆழ்துளை கிணறி தோண்டி உள்ளார். தண்ணீர் கிடைக்காத நிலையில், ஆழ்துளை கிணற்றை சரியாக மூடவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த ஆழ்துளை கிணற்றில் 2 வயது சிறுவன் தவறி விழுந்ததாக சொல்லப்படுகிறது.