டெல்லி: கேரள அரசு முல்லை பெரியாறு பகுதியில் மிகப் பெரிய கார் பார்க்கிங் கட்டுவது தொடர்பாக, சர்வே ஆஃப் இந்தியா சமர்ப்பித்த அறிக்கையை கண்டித்து தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற ஜூலை 10ஆம் தேதிக்குள் தீர்வு காணவேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிபதி அபய் ஸ்ரீநிவாஸ் ஓகா தலைமையிலான அமர்வும் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் வி.கிருஷ்ணமூர்த்தி, பி.வில்சன், ஜி.உமாபதி மற்றும் வழக்கறிஞர் டி.குமணன் ஆகியோர் ஆஜராகினர்.
அப்போது, கேரள அரசு முல்லை பெரியாறு அணை பகுதியில் கார் பாக்கிங் கட்டுவது தொடர்பாக சர்வே ஆஃப் இந்தியா அளித்துள்ள ஆய்வறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழக அரசு தரப்பில் தக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான அந்த மனுவில், "கடந்த 1924ஆம் அண்டு நீர்வளத்துறை தயாரித்த வரைப்படத்தை ஆய்வுக்குழு கணக்கில் கொள்ளவில்லை. கேரள அரசு கட்டிவரும் வாகன நிறுத்துமிடத்தின் தரைத்தளம் எங்கு உள்ளது என்பதையும் இந்த ஆய்வுக்குழு ஆய்வு செய்யவில்லை. குறிப்பாக, வாகன நிறுத்துமிடத்தின் எல்லை நிர்ணயிக்கப்பட்ட போது, தமிழக அரசின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.