தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புனேவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து; 3 பேர் உயிரிழப்பு! - pune helicopter crash - PUNE HELICOPTER CRASH

மகாராஷ்டிராவில் இன்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இரு விமானிகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

புனே ஹெலிகாப்டர் விபத்து
புனே ஹெலிகாப்டர் விபத்து (credits - ANI)

By ANI

Published : Oct 2, 2024, 11:11 AM IST

புனே: மகாராஷ்டிராவின், புனே மாவட்டத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு விமானிகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்தில் உள்ள பாவ்தான் பகுதியில் இன்று காலை 6:45 மணியளவில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை ஹெலிபேடில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் அந்த ஹெலிகாப்டர் பாவ்தானில் உள்ள காட்டுப் பகுதியில் விழுந்து வெடித்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த இரண்டு விமானிகள், ஒரு பொறியாளர் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பிம்ப்ரி சின்ச்வாட் காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், விபத்து நடந்த இடத்தில் இரண்டு ஆம்புலன்ஸ்கள் மற்றும் நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், ஹெலிகாப்டர் எதனால் விபத்துக்குள்ளானது என்ற காரணத்தைக் கண்டறிய உயர் மட்ட விசாரணை நடந்து வருகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details