ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டம் துனிகி கிராமத்தில் உள்ள க்ரிஷி விக்யான் கேந்திராவில் பணிபுரியும் இளம் விஞ்ஞானி பார்கவிக்கு, 75வது குடியரசு தினத்தன்று, புதுமை மற்றும் அர்ப்பணிப்பின் வெளிப்பாட்டிற்காக கிராமிய கண்டுபிடிப்பு விருது வழங்கப்பட்டது.
அதாவது, தெலங்கானா மாநில புதுமைப் பிரிவு திட்டத்தில் (TSIC) பங்கேற்ற பார்கவி, விவசாயத்தில் அதில் குறிப்பாக ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தி, சிறுதானியங்களைப் பயிரிடுவதில் மும்மரம் காட்டி வருகிறார்.
திறமை உள்ள தனிநபர்களைக் கண்டறிந்து ஊக்குவிப்பதற்காக, மாநில அரசால் துவங்கப்பட்டதுதான் இந்த டிஎஸ்ஐசி திட்டம். மேலும் கடந்த 2023ஆம் ஆண்டை இனிப்பு தானியங்களின் (Sweet Grains) ஆண்டாக மத்திய அரசு அறிவித்ததுடன் ஒத்துப்போகிறது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இத்திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பார்கவி, கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, புதுமையான முறையில் ஸ்வீட் கார்ன்களை பயிரிட்டுள்ளார்.
மேலும் இத்திட்டத்தில் பருப்பு சாகுபடியில் 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த கண்டுபிடிப்பாளர் என்ற பட்டத்தையும் பெற்ற பார்கவி, விவசாயம் தொடர்பான அணுகுமுறை, பயிர்கள் வளர்ப்பது மட்டுமின்றி, சமையல் எண்ணையை உபயோகிக்காமல் சத்தான உணவுகளை தயாரிப்பது குறித்தும் வலியுறுத்தி வருகிறார். இதுமட்டுமின்றி, சோலார் ட்ரையர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தரம் மற்றும் சுவை நிறைந்த தின்பண்டங்கள், பருப்பு மற்றும் கீரை வகைகள் போன்றவற்றையும் உருவாக்கி வழங்கி வருகிறார்.
நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ, தான் பயிரிடும் சிறுதானியங்களின் ஊட்டச்சத்து நன்மைகளை மேற்கோள் காட்டி வாதிட்டார் பார்கவி. நார்ச்சத்து அதிகம் உள்ள பார்கவின் தயாரிப்புகள், இரத்த அழுத்தம் மற்றும் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுவதாகவும் கூறப்படுகிறது. சமூதாய ஆரோக்கத்திற்கு பங்களிக்கும் விதமாக, குறிப்பாக குழந்தைகளை இலக்காகக் கொண்டு, க்ரிஷி விக்யான் கேந்திராவில் தயாரிக்கப்படும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை 3 மாதங்களுக்கு இலவசமாக விநியோகம் செய்தார்.
பார்கவி, க்ரிஷி அறிவியல் மையத்தில் நிலையான மற்றும் ரசாயனம் இல்லாத விவசாயம் செய்வதில் உறுதியுடன் இருப்பதுடன், அவரது நிபுணத்துவத்தை உள்ளூர் விவசாயிகளுக்கு தீவிரமாக பகிர்ந்து வருகிறார். மேலும், ராஜ்புரி போன்ற விதைகளையும், குசுமா மற்றும் நிலக்கடலை எண்ணெய் போன்ற பயிர்களையும் வழங்கும் பார்கவி, கூடுதலாக ஏஜி பயோடெக் (AG Biotech) உடன் இணைந்து, சிவப்பு கற்றாழையில் இருந்து இயற்கையான சோப்புகளை உற்பத்தி செய்ததன் மூலம் இரசாயனங்கள் இல்லாதத்து என பிரபலமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
பார்கவி தனது விவசாயம் நோக்கம் மட்டுமின்றி, விவசாயத்தில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் க்ரிஷி விக்யான் கேந்திராவின் முன்முயற்சிகள் மற்றும் டிஎஸ்ஐசி போன்ற திட்டங்கள் மூலம், விவசாயத்தில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கும் எதிர்காலத்தை கற்பனை செய்து செயல்பட்டு வருகிறார்.
தற்போது பார்கவி கிராம கண்டுபிடிப்பு விருது மட்டுமின்றி, ஏராளமான பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இந்த விருது, அவரது அயராத முயற்சி, புதுமை, ஆரோக்கியம் மற்றும் விவசாயத்தில் பெண்களின் பங்கை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. தற்போது இந்த டிஎஸ்ஐசி போன்ற திட்டங்கள், விவசாயத் துறையில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வேகத்தை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'புதிய அரசு அமைந்த உடன் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்' - பிரதமர் மோடி பேட்டி