பெங்களூரு: பிதார் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்ஸ்ரீநிவாஸ் (24).பெங்களூர் மஞ்சுநாத் நகரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி மென்பொருள் சார்ந்த படிப்பை படித்து வந்துள்ளார். இவர் நேற்று இரவு 8 மணியளவில் விடுதியில் உள்ள தனது அறையில் செல்போனிற்கு சார்ஜ் போட்டபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
அப்போது, அறையின் வெளியே இருந்த அவரது நண்பர், சிறிது நேரம் கழித்து இரவு உணவு உண்பதற்காகஸ்ரீநிவாஸை அழைக்கச் சென்றுள்ளார். அப்போது தரையில் படுத்துக் கிடந்த ஸ்ரீநிவாஸை தொட்டு எழுப்பிய அவரது நண்பருக்கும் மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக ஸ்ரீநிவாஸின் நண்பர் உயிர் தப்பியுள்ளார்.