டெல்லி: தொழில்துறை ஆல்கஹால் மீது வரி விதிக்கலாம் மற்றும் ஒழுங்குபடுத்தலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு (8:1) பெரும்பான்மையான தீர்ப்பு வழங்கியது. ஆனால், இந்த அமர்வில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ள நீதிபதி பி.வி.நாகரத்னா, தொழில்துறை மது உற்பத்தி மற்றும் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதற்கான அதிகாரம் மாநிலங்களுக்கு இல்லை என்று கூறியுள்ளார்.
தொழில்துறை மது உற்பத்தியில் மத்திய அரசுக்கு ஒழுங்குமுறை அதிகாரம் இருப்பதாக கடந்த 1990ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் 7 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து உத்தரப் பிரதேசம் உட்பட பல மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், பி.வி.நாகரத்னா, மனோஜ் மிஸ்ரா உள்ளிட்ட 9 நீதிபதிகளைக் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அதில், நீதிபதி பி.வி.நாகரத்னா தவிர மற்ற 8 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் மாநிலப் பட்டியலின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள 8வது பதிவில் குறிப்பிட்டுள்ள "போதை மது" என்ற சொல் தொழில்துறை மதுவின் வரம்பிற்குள் வரும். ஆகையால், தொழில்துறை ஆல்கஹால் உற்பத்திக்கும், விநியோகத்தை முறைப்படுத்த சட்ட இயற்றுவதற்கும் மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என தீர்ப்பளித்தனர்.
இதையும் படிங்க:பயங்கரவாதத்தை வேரறுப்பதில் இரட்டை நிலைப்பாட்டுக்கு இடமில்லை.. பிரிக்ஸ் மாநாட்டில் கர்ஜித்த மோடி!