ஹைதராபாத்:இலங்கை நாட்டின் மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குழுவினர் நாளை மறுதினம் (ஜூலை 15) இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட குழுவினர், இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஓர் தனியார் நிறுவனத்தின் அழைப்பின் பெயரிலேயே அமைச்சர் இந்தியா பயணிக்க உள்ளனர்.
15 ஆம் தேதி இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு மீண்டும் 19 ஆம் தேதி நாடு திரும்ப உள்ளனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன், நெக்டா நிறுவனத்தின் இலங்கை வடக்கு மாகாண இணைப்பாளர் நிருபராஜ், நாரா நிறுவனப் பணிப்பாளர் உள்ளிட்டவர்களும் பயணிக்க உள்ளனர்.
இந்த வருகையின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுக்களை மீண்டும் முன்னெடுத்து, இந்தியக் கடல் தொழிலாளர்கள் விவகாரத்தை தீர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தமிழ்நாடு மீனவர்கள் கடந்த சில மாதங்களாக இலங்கை கடற்படையினரால் எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக சிறை பிடிக்கப்படுகின்றனர்.
இந்திய வெளியுறத்துறை அமைச்சகம் அழைப்பு:முன்னதாக இலங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, "இந்திய மீனவர் பிரச்சனை குறித்து ஆலோசனை செய்வதற்காக டெல்லிக்கு வருமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும்; இதனால், தடைபட்டிருக்கும் இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுக்களை மீண்டும் முன்னெடுத்து, இந்தியக் கடல் தொழிலாளர்கள் விவகாரத்தை தீர்ப்பதற்கு அமைச்சர் இணக்கம் ஏற்படும்" என அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.