தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முன்னாள் பிரதமர் தேவுகடா பேரன் ஆபாச வீடியோ விவகாரம்: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை - சித்தராமையா! - Deve Gowda grandson sex scandal - DEVE GOWDA GRANDSON SEX SCANDAL

முன்னாள் பிரதமர் எச்.டி தேவகவுடாவின் பேரன் பிரஜ்வெல் ரேவண்ணா தொடர்புடைய ஆபாச வீடியோ விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடைபெறுவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்து உள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 28, 2024, 1:16 PM IST

பெங்களூரு:முன்னாள் பிரதமர் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் எச்.டி தேவகவுடா. இவரது இரு மகன்களில் இளைய மகன் எச்.டி. குமாரசாமி முன்னாள் கர்நாடக முதலமைச்சராக பதவி வகித்தார். மூத்த மகன் எச்.டி ரேவணணா. கர்நாடக மாநிலம் ஹசன் ஹோலேநரசிபூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

நடப்பு மக்களவை தேர்தலில் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி பாஜக கூட்டணியில் போட்டியிடுகிறது. இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் உள்ள 28 மக்களவை தொகுதிகளில் 14 இடங்களுக்கு கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலின் போது வாக்குப்பதிவு நடைபெற்றது.

மீதமுள்ள தொகுதிகளில் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் எச்.டி.ரேவண்ணாவின் மகனும் ஹசன் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான பிரஜ்வெல் ரேவண்ணா தொடர்புடைய ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில் ஆயிரக்கணக்கான பெண்களை பிரஜ்வெல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டது. உதவி கேட்ட வந்த பெண்களிடம் பிரஜ்வெல் ரேவண்ணா பாலியல் ரீதியில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கி அதை வீடியோவாக பதிவு செய்ததாகவும் தற்போது அந்த வீடியோ வெளியானதாகவும் கூறப்பட்டு உள்ளது.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்தக் கோரி கர்நாட்கா மாநில மகளிர் ஆணைய தலைவர், மாநில அரசு மற்றும் முதலமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்து உள்ளார்.

இந்த குழு வழங்கும் அறிக்கையை தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே பிரஜ்வெல் ரேவண்ணா இந்தியாவில் இல்லை என்றும் வெளிநாடு சென்றதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கர்நாடக மாநிலத்தில் மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு மே 7ஆம் தேதி இரண்டாவது கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரஜ்வெல் ரேவண்ணாவின் வீடியோ விவகாரம் வெளியாகி கடும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதனால் பாஜக - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியில் பிளவு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க :டெல்லி காங்கிரஸ் தலைவர் திடீர் ராஜினாமா! அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால் அலறும் காங்கிரஸ் தலைமை! - Delhi Congress Chief Resign

ABOUT THE AUTHOR

...view details