ஹத்ராஸ்:உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் ஆன்மீகவாதி போலோ பாபா சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், வழக்கு குறித்து பேசிய அலிகர்க் ஐஜி ஷலப் மதுர், ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சிக்கி 121 பேர் உயிரிழந்த நிலையில், அனைவரது உடல்களும் அடையாளம் காணப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உறவினர்களிடம் வழங்கப்பட்டதாக கூறினார்.
மேலும், ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த 6 பேரை இதுவரை கைது செய்து உள்ளதாக அவர் கூறினார். நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்ததை அடுத்து அனைவரும் தலைமறைவான நிலையில் தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
இரண்டு பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளி என போலீசார் கூறூம் பிரகாஷ் மதுகர் என்பவரை தேடி வருவதாகவும் அவர் கூறினார். கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்திற்கு பின்னர் பிரகாஷ் மதுகர் தலைமறைவானதாகவும் அவர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 1 லட்ச ரூபாய் வரை சன்மானம் வழங்கப்படும் என்றும் ஐஜி ஷலப் மதுர் தெரிவித்தார்.
மேலும், பிரகாஷ் மதுகருக்கு எதிராக பிணையில் வெளியே வரமுடியாத வகையிலான பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவத்தில் ஏதேனும் சதித் திட்டம் உள்ளதா என்று விசாரித்து வருவதகாவும் அவர் கூறினார். முன்னதாக ஆன்மீகவாதி போலே பாபாவின் ராம் குதிர் டிரஸ்ட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.