மொரதாபாத் :விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமடைந்து உள்ளது. உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி - காங்கிரஸ் கட்களிடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில். ஒருவழியாக இறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உத்தர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு 17 இடங்களை சமாஜ்வாதி ஒதுக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு மிக நெருக்கமான அமேதி மற்றும் ரேபரலி தொகுதிகளையும் சேர்த்து 17 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை வீழ்த்தி ஸ்மிரிதி ராணி மத்திய அமைச்சரானார். இந்த முறையும் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக காங்கிரஸ் கட்சிக்கு 11 இடங்கள் மட்டுமே சமாஜ்வாதி கட்சி ஒதுக்கியதாக தகவல் வெளியானது.