தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி தற்கொலை முயற்சி.. காலாப்பட்டு சிறையில் பரபரப்பு! - puducherry girl murder case

Puducherry Girl Murder: புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் தொல்லை கொடுத்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் வழக்கில் முக்கிய குற்றவாளியான விவேகானந்தன் சிறையில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காலாப்பட்டு மத்திய சிறை
காலாப்பட்டு மத்திய சிறை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 11, 2024, 10:59 AM IST

புதுச்சேரி:புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 2ஆம் தேதி மாயமான நிலையில், கழிவுநீர் வாய்க்காலில் 5ம் தேதி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த வழக்கில் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளி விவேகானந்தன் இன்று திடீரென தனது சட்டையை கொண்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதனைப் பார்த்த சக கைதியான கருணாஸ் சத்தம் போடவே, வார்டன் ஓடி வந்து காப்பற்றியுள்ளார். மேலும் இது போன்ற முயற்சிகளில் ஈடுபடக்கூடாது என எச்சரித்துள்ளார். இருவரையும் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி, முத்தியால்பேட்டை போலீசார் இன்று(மார்ச் 11) நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய உள்ளனர்.

வழக்கின் பின்னணி:புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட ஒரு பகுதியைச் சேர்ந்த தம்பதியின் 9 வயது மகள் கடந்த மார்ச் 2ஆம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளார். இந்த நிலையில் சிறிது நேரம் கழித்து சிறுமியை அவரது தாயார் தேடிப்பார்த்தபோது, அவர் கிடைக்காததால் சோலை நகர் புறக்காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

சடலமாக மீட்பு:இதனிடையே சிறுமி காணாமல் போன 4 நாட்களுக்குப் பிறகு, கடந்த 5ஆம் தேதி சிறுமியின் வீட்டின் அருகே உள்ள வாய்க்காலில், சாக்கு மூட்டையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து சிறுமியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காகக் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருவர் கைது:இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இந்த வழக்கில் கருணாஸ்(19) மற்றும் விவேகானந்தன்(57) ஆகிய இருவர் கைது செய்யப்பட்ட காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான விவேகானந்தன் தற்கொலை செய்ய முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:நெல்லையில் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட நபர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details