டெல்லி: கடந்த 2000ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி டெல்லி செங்கோட்டைக்குள் அத்துமீறி நுழைந்த பயங்கரவாதிகள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடந்த நான்கு நாட்களுக்குப் பிறகு தாக்குதலில் தொடர்புடைய முகமது ஆரிப் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டார்.
தொடர் விசாரணையில் முகமது ஆரிப் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர் என தெரிய வந்தது. அவருக்கு எதிரான வழக்கில் கடந்த 2005ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதம் முதலாக குற்றம் சாட்டப்பட்டார். பின்னர் அந்த வழக்கின் நிறைவாக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து 1999ஆம் ஆண்டு இந்தியாவிற்குள் நுழைந்த ஆரிப் மற்றும் 3 லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகளும், ஸ்ரீநகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்து செங்கோட்டையைத் தாக்கும் திட்டத்தைத் தீட்டியுள்ளனர். அத்திட்டத்தின்படி செங்கோட்டைக்குள் நுழைந்த அபு ஷாத், அபு பிலால் மற்றும் அபு ஹைதர் ஆகிய மூன்று பயங்கரவாதிகளும் தனித்தனியாக என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட முகமது ஆரிபின் மரண தண்டனையை 2007ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. அதைத் தொடர்ந்து 2011ஆம ஆண்டு தூக்கு தண்டனையை எதிர்த்து தொடர்ந்து மனுவில் உச்ச நீதிமன்றம் அவரது தூக்கு தண்டனையை உறுதி செய்தது.