தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாரத ரத்னா விருது: பிவி நரசிம்ம ராவ், வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவர் வழங்கினார் ! - Bharat Ratna Award - BHARAT RATNA AWARD

Bharat Ratna Award: முன்னாள் பிரதமர்கள் பிவி நரசிம்ம ராவ், சவுத்ரி சரண் சிங், தமிழகத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்எஸ் சுவாமிநாதன் உள்ளிட்டோருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னாவை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 30, 2024, 12:41 PM IST

டெல்லி : தலைநகர் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நாட்டின் உயரிய விருதாக கருதப்படும் பாரத ரத்னா விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் பிரதமர்கள் பிவி நரசிம்ம ராவ், சவுத்ரி சரண் சிங், தமிழகத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்எஸ் சுவாமிநாதன், இரண்டு முறை பீகார் முதலமைச்சராக இருந்த கர்ப்பூரி தாகூர் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்கி கவுரவித்தார்.

முன்னாள் பிரதமர் பிவி நரசிம்ம ராவுக்கு அறிவிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை அவரது மகன் பிவி பிரபாகர் ராவ் பெற்றுக் கொண்டார். அதேபோல், சவுத்ரி சரண சிங்கிற்கு அறிவிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை அவரது பேரனும் ராஷ்டிரிய லோக் தன் கட்சியின் தலைவருமான ஜெயந்த் சவுத்ரி பெற்று கொண்டார்.

தமிழகத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்எஸ் சுவாமிநாதனுக்கு அறிவிக்கப்பட்ட விருதை அவரது மகள் நித்யா ராவ் பெற்றுக் கொண்டார். அதேபோல் இரண்டு முறை பீகார் முதலமைச்சராக இருந்த கர்ப்பூரி தாக்கூருக்கு அறிவிக்கப்பட்ட விருதை அவரது மகன் ராம் நாத் தாக்கூர் பெற்றுக் கொண்டார்.

இந்த ஆண்டு 5 பேருக்கு பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. இதில் நான்கு பேருக்கு ராஷ்டிரபதி பவனில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார். பாஜக மூத்த தலைவர் மற்றும் முன்னாள் துணை பிரதமர் எல்கே அத்வானிக்கு அவரது வீட்டிற்கு சென்று பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த விருது வழங்கும் விழாவில் துணை குடியரசுத் தலைவர் ஜெகதிப் தன்கர், பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் மற்றும் பிரமூகர்கள் கலந்து கொண்டனர். நாட்டின் வளர்ச்சிக்காக தொண்டாற்றியவர்களுக்கு மத்திய அரசு தரப்பில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகின்றன.

அந்த வகையில், பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ உள்ளிட்ட விருதுகள் மத்திய அரசு தரப்பில் வழங்கி கவுரவிக்கப்படுகின்றன. மேலும், குறிபிட்ட துறையில் சிறப்பான முறையில் பங்காற்றிய மற்றும் நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :முதலமைச்சர் பொறுப்பில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை நீக்கக் கோரிய மனு தள்ளுபடி - டெல்லி உயர்நீதிமன்றம்! - Arvind Kejriwal

ABOUT THE AUTHOR

...view details