புதுடெல்லி: நமக்கெல்லாம் டிசம்பர் 25ஆம் தேதியான இந்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். மிகவும் அன்புக்குரிய முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களின் 100ஆவது பிறந்த நாளை நமது நாடு கொண்டாடுகிறது
வாஜ்பாய் ஏற்படுத்திய தாக்கம்:21ஆம் நூற்றாண்டை நோக்கி இந்தியாவின் மாற்றத்தை கட்டமைத்தவராக இருந்த அடல் அவர்களுக்கு நமது தேசம் எப்போதும் நன்றியுடையதாக இருக்கும். 1998ஆம் ஆண்டு அவர் பிரதமராக பதவி ஏற்றபோது நமது தேசம் அரசியல் நிலையற்ற தன்மை எனும் காலகட்டத்தை கடந்து வந்திருந்தது. வெறும் 9 ஆண்டுகில் நான்கு மக்களவை தேர்தல்கள் நடைபெற்றன. இந்தியாவின் மக்கள் பொறுமை இழந்து விட்டனர். ஆட்சியில் இருந்த அரசுகள் வாக்குறுதிகளை நிறைவேற்றுமா என்பதில் மக்களுக்கு சந்தேகம் இருந்தது. வலுவான செயலாற்றும் அரசின் ஆட்சியை அளித்து நிச்சயமற்ற தன்மையை அடல் பிகாரி வாஜ்பாய் மாற்றினார். மிகவும் எளிய குடும்ப சூழலில் இருந்து வந்து சாதாரண மனிதர்களின் வாழ்வாதார போராட்டங்களை உணர்ந்தவர். திறமையான நிர்வாகமாக மாற்றும் சக்திக் கொண்டிருந்தார்.
நம்மை சுற்றி உள்ள பல்வேறு துறைகளில் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் தலைமை ஏற்படுத்திய நீண்டகால தாக்கத்தை யார் ஒருவரும் பார்க்க முடியும். தொலைபேசி மற்றும் தொலை தொடர்புகள், தகவல் தொழில்நுட்ப உலகில் அவரது ஆட்சியின் சகாப்தம் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது. மிகவும் பன்முகத்தன்மை கொண்ட இளைஞர் சக்திக்கு இவையெல்லாம் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறது என்ற வகையில் குறிப்பாக நம்மை போன்ற தேசத்துக்கு இது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அடல் பிகாரி அவர்களின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் சாதாரண மக்களும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான மிகவும் தீவிரமான முயற்சியாகும்.
பொருளாதார எழுச்சி:அதே நேரத்தில் இந்தியாவை இணைப்பதில் தொலை நோக்கு கண்ணோட்டமும் இருந்தது. இந்தியாவை குறுக்கும், நெடுக்குமாக இணைக்கும் தங்க நாற்கர சாலை திட்டத்தை இன்றும் கூட பெரும்பாலான மக்கள் நினைவு கூர்கின்றனர். இதற்கு இணையாக பிரதமரின் கிராம் சதக் யோஜனா போன்ற முயற்சிகளில் உள்ளூர் அளவில் இணைப்புகளை விரிவாக்கம் செய்ததில் வாஜ்பாய் அரசு குறிப்பிடத்தக்க பங்காற்றியது. அதே போல டெல்லியில் மெட்ரோ ரயில் சேவைப் பணிகளுக்காக அவரது அரசு விரிவான முன்னெடுப்புகளை மேற்கொண்டது. இந்த திட்டம் உலக தரத்திலான கட்டமைப்புத் திட்டமாக நிலைத்திருக்கிறது. ஆகவே, வாஜ்பாய் அரசானது பொருளாதார வளர்ச்சிக்கு மட்டும் ஊக்கமளிக்காமல், தவிர தொலைதூர பகுதிகளை நெருக்கமாக இணைக்க, ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பையும் வளர்த்தது.
சமூகத்துறை என்று வரும்போது, சர்வ சிக்ஷா அபியான் போன்ற முயற்சி, குறிப்பாக ஏழைகள், விளிம்பு நிலை பிரிவினர் உட்பட தேசம் முழுவதும் உள்ளோருக்கு நவீன கல்வியை கிடைக்க செய்யும் வகையிலான இந்தியாவை கட்டமைக்க வாஜ்பாய் எப்படி கனவு கண்டார் என்பது வெளிப்படுகிறது. அதே சமயம் பல தசாப்தங்களாக தேக்க நிலையை ஏற்படுத்தும் பாராபட்சத்துடன் கூடிய பொருளாதாரத்தத்துவம் ஊக்குவிக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வந்த நிலையில் அவரது அரசு பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்து இந்தியாவின் பொருளாதார எழுச்சிக்கு களம் அமைத்தார்.
போக்ரான் அணுகுண்டு சோதனை:வாஜ்பாய் அவர்களின் தலைமைத்துவத்துக்கு மிகச் சிறந்த உதாரணத்தை 1998ஆம் ஆண்டு கோடை காலத்தில் காணமுடிந்தது. அவரது அரசு அந்த ஆண்டின் மே 11ஆம் தேதிதான் பதவி ஏற்றிருந்தது. இந்த நிலையில் ஆபரேஷன் சக்தி என அறியப்படும் போக்ரான் அணுகுண்டு சோதனையை இந்தியா மேற்கொண்டது. இந்த சோதனைகள் இந்தியாவின் விஞ்ஞானிகள் சமூகத்தின் சக்தியை எடுத்துக் காட்டுவதாக இருந்தது. இந்தியா இந்த சோதனைகளை மேற்கொண்டதைக் கண்டு உலக நாடுகள் அதிர்ச்சியில் உறைந்தன. உலகநாடுகள் தங்கள் அதிருப்தியை தெளிவான முறையில் வெளிப்படுத்தின.
எந்த ஒரு தலைவரும் வளைந்து கொடுக்கும் தன்மையைக் கொண்டிருப்பர். ஆனால், அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள், மிகவும் வித்தியாசமாக செயல்பட்டார். அ்பபடி என்ன நடந்தது? இரண்டு நாட்கள் கழித்து மே 13ஆம் தேதி மற்றும் சில சோதனைகளுக்கு அழைப்பு விடுத்த இந்திய அரசு தமது முடிவில் இருந்து பின்வாங்காமல் உறுதியாக இருந்தது. மே 11ஆம் தேதி சோதனை, அறிவியல் திறனை வெளிப்படுத்தியது. 13ஆம் தேதி மேற்கொண்ட சோதனையானது உண்மையான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியது. அச்சுறுத்தல் அல்லது அழுத்தத்துக்கு இந்தியா பணியும் என்ற நாட்கள் கடந்த காலமாக இருந்தது என்பதை இந்த செய்தி உலகத்துக்கு சொன்னது. இந்தியா மீதான சர்வதேச அளவிலான தடைகள் இருந்த போதிலும் அப்போதைய வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உறுதியோடு இருந்தது. உலக அமைதியின் வலிமையான ஆதரவாளராக அதே சமயம் இந்தியா தனது இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான உரிமையை வெளிப்படுத்தியது.
அரசியல் பயணம்: வாஜ்பாய் இந்திய ஜனநாயகத்தை புரிந்து வைத்திருந்தார். தவிர, மேலும் அதனை வலுவாக்க வேண்டிய தேவை இருப்பதாக உணர்ந்தார். இந்திய அரசியல் கூட்டணி மறு வரையை தேசிய ஜனநாய கூட்டணியை அடல் பிகாரி வாஜ்பாய் முன்னின்று உருவாக்கினார். மக்களை ஒன்றிணைத்தார். வளர்ச்சிக்கான, தேசிய செயல்பாடுகளுக்கான பிராந்திய குறிக்கோளுக்கானதாக தேசிய ஜனநாய கூட்டணியை சக்தி வாய்ந்தாக உருவாக்கினார். அவரது அரசியல் பயணம் முழுவதும் அவரது நாடாளுமன்ற புத்திசாலித்தனம் காணப்பட்டது.