தமிழ்நாடு

tamil nadu

5ம் கட்டத் தேர்தலில் 57.47% வாக்குப்பதிவு! - Phase 5 Lok Sabha Election Live

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 20, 2024, 6:39 AM IST

File Photo (ANI)
File Photo (ANI)

20:05 May 20

5 ஆம் கட்டத் தேர்தலில் 57.47% வாக்குப்பதிவு

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவில் 49 தொகுதிகளிலும் சேர்த்து 57.47 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது

15:53 May 20

பாஜக வேட்பாளர் கங்கணா ரானவத்துக்கு கருப்புக் கொடி!

ஹிமாச்சல பிரதேச மாநிலம், காஜா பகுதிக்கு இன்று பயணம் மேற்கொண்ட பாஜக வேட்பாளரும், பிரபல பாலிவுட் நடிகையுமான கங்கணா ரனாவத்துக்கு காங்கிரஸ் தொண்டர்கள் கருப்பு கொடி காட்டியதுடன், அவருக்கு எதிராக கோஷங்களும் எழுப்பினர். இம்மாநிலத்தின் மாண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக கங்கணா ரனாவத் போட்டியிடுகிறார். அங்கு ஜுன் 1ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

13:25 May 20

ரே பரேலியில் ராகுல் விசிட்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான் போட்டியிடும் ரே பரேலி தொகுதிக்கு இன்று வருகை தந்தார். அங்கு வாக்குப்பதிவு நடைபெறும் சில வாக்குச்சாவடிகளை பார்வையி்ட்ட அவர், அங்கு வாக்கு செலுத்திய பொதுமக்களையும் சந்தித்தார். முன்னதாக அவர் பீபாலிஷ்வர் அனுமன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

13:03 May 20

குடும்பத்துடன் வாக்களித்த முன்னாள் முதல்வர்!

மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, தமது மனைவி ராஷ்மி தாக்கரே, மகன் ஆதித்யா தாக்கரே ஆகியோருடன் மும்பையில் உள்ள வாக்குசாவடியில் வாக்களித்தார். பிரபல கிரிக்கெட் வீரர் அஜிங்க்யா ரஹானேவும் மும்பையில் தமது வாக்கை செலுத்தினார். பிரபல பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், அனில் கபூர் உள்ளிட்ட பிரபலங்களும் மும்பை பகுதி வாக்குச்சாவடிகளில் தங்களது வாக்கை செலுத்தினர்.

10:56 May 20

சொந்த ஊரில் வாக்களித்த ஸ்மிருதி இரானி!

மத்திய அமைச்சரும், உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதி எம்.பி.யுமான ஸ்மிருதி இரானி, கௌரிகஞ்சுக்கு உட்பட்ட தமது சொந்த ஊரில் வாக்கு செலுத்தினார். தேசத்தின் எதிர்கால நலன் கருதி, பொதுமக்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

10:05 May 20

மேற்கு வங்கத்தில் விறுவிறு; மகாராஷ்டிராவில் மந்தம் -வாக்குப்பதிவு 9 மணி நிலவரம்!

நாடாளுமன்ற மக்களவைக்கு இன்று நடைபெறும் ஐந்தாம் கட்ட தேர்தலில் மேற்கு வங்கத்தில் 15.35 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. அதற்கு அடுத்ததாக ஜார்க்கண்டில் 11.08%, பிகாரில் 8.86% வாக்குகள் பதிவாகி உள்ளன. குறைந்தபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 6.33% வாக்குகள் பதிவாகி உள்ளன.

07:59 May 20

நடிகர் அக்‌ஷய் குமார் வாக்களிப்பு

நடிகர் அக்‌ஷய் குமார் மும்பையில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'எனது இந்தியா வளர்ச்சியடைந்து வலுவாக இருக்கவே நான் விரும்புவதாகவும், இதை மனதில் வைத்து வாக்களித்ததாகவும், இந்தியாவில் மக்கள் சரியானது எது என்று நினைக்கிறார்களோ அதற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

07:53 May 20

சிவசேனா வேட்பாளர் யாமினி ஜாதவ் வாக்களிப்பு

மகாராஷ்டிரா மாநிலம், தெற்கு மும்பையைச் சேர்ந்த சிவசேனா வேட்பாளர் யாமினி ஜாதவ் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'வாக்குரிமையை மக்கள் பயன்படுத்த வேண்டும் எனவும், பெண்ணை ஒருபோது பலவீனமாக கருத வேண்டும் எனவும், நான் வலிமையான சமுதாயத்தை மலர வைக்க அர்ப்பணிப்புடன் செயல்படுவேன் எனவும், மக்களுக்காக உழைத்து வரும் நான் மக்களின் குரலாக நாடாளுமன்றத்திலும், கர்ஜிக்க தயாராக உள்ளதாகவும்' தெரிவித்தார்.

07:49 May 20

பாஜக வேட்பாளர் ரத்தின் சக்ரவர்த்தி ஹவுராவில் வாக்களிப்பு

மேற்கு வங்கம் மாநிலம், பாஜக வேட்பாளர் ரத்தின் சக்ரவர்த்தி ஹவுராவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இத்தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தற்போதைய எம்பி பிரசூன் பானர்ஜியை மீண்டும் வேட்பாளாராக களமிறக்கியுள்ளது.

07:26 May 20

உ.பி. முன்னாள் முதலமைச்சர் மாயாவதி வாக்களிப்பு

உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி, லக்னோவில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எல்லோரும் வெளியே வந்து வாக்களிக்க வேண்டும் எனவும், அனைத்து அரசியல் கட்சிகளும் வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் பிரச்னைகளுக்கு முன்னுரிமை தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

07:12 May 20

போட்டியிடும் முக்கியத் தலைவர்கள்

இதுவரை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 379 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி ரானி, பியூஸ்கோயல், காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல் காந்தி, காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதேபோல, ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பஸ்வானும், லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யாவும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

07:01 May 20

5ஆம் கட்ட மக்களவை தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு

6 மாநிலங்களில் உள்ள 49 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. உத்தர பிரதேசம் (14 தொகுதிகள்), மகாராஷ்டிரா (13 தொகுதிகள்), மேற்கு வங்கம் (7 தொகுதிகள்), பீகார் (5 தொகுதிகள்), ஜம்மு & காஷ்மீர் (1 தொகுதி), லடாக் (1 தொகுதி) உள்ளிட்ட 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோல, ஒடிசாவின் 35 சட்டமன்றத் தொகுதிகளின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று நடைபெறுகிறது.

06:18 May 20

ரேபரேலி, அமேதி உள்ளிட்ட 49 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

Lok Sabha Polls Phase 5: 8 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. மேலும், ஒடிசாவில் உள்ள 35 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இவ்வாறு நடைபெற உள்ள 2024 மக்களவைத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவு பெறும்.

ABOUT THE AUTHOR

...view details