டெல்லி: கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மணி சங்கர் ஐயர் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "பாகிஸ்தானும் இறையாண்மை கொண்ட நாடு. அவர்கள் மரியாதைக்குரிய தேசம். மத்திய அரசு பாகிஸ்தானை கடுமையாக வசைபாடலாம்.
ஆனால் பாகிஸ்தானுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும். துப்பாக்கியுடன் நடப்பதால் ஒன்று கிடைக்கப் போவதில்லை அது மேலும் பதற்றத்தை அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானில் இந்திய எதிர்ப்பு அரசியால் அமைந்தால் இந்தியாவின் கதி என்னவாகும். பாகிஸ்தானிடம் அணுகுண்டு உள்ளது, நம்மிடமும் அணுகுண்டு உள்ளது. ஆனால் இந்திய எதிர்ப்பு அரசியல் காரணமாக லாகூர் நிலையத்தில் குண்டை வெடிக்கச் செய்தால், எட்டு நிமிடங்களுக்குள் அதன் கதிரியக்க வீச்சி நமது நாட்டின் அமிர்தசரஸை அடைந்துவிடும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அவர்கள் அணுகுண்டுகள் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும். பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கினால் இரு தரப்பிலும் சுமூகம் ஏற்படும். பாகிஸ்தானிடம் உள்ள அணுகுண்டுகளை கருத்த்தில் கொண்டு இந்தியா அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும்.
அங்கு இந்திய எதிர்ப்பு அரசியல் கொண்டு தலைவர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் பட்சத்தில் அது இந்தியாவுக்கு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துக் கூடும் என்று மணி சங்கர் ஐயர் தெரிவித்தார். பிரதமர் மோடி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்த மணி சங்கர் ஐயர், கடந்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.