பாட்னா: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பீகாரின் முதலமைச்சர் நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெறும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் தலைவரான நிதிஷ் குமார் முதலமைச்சராகவும், நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
பீகார் மாநிலத்தின் துணை முதலமைச்சராக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வு யாதவ் இருந்தார். இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகளுடன் நிதிஷ் குமாருக்கு அதிருப்தி ஏற்பட்ட நிலையில் கூட்டணியில் இருந்து விலகுவதாக நிதிஷ் கூறி வந்த நிலையில், இன்று (ஜன. 28) தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்து முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.