ETV Bharat / state

ஒடுக்கப்பட்ட மக்களை துணை முதல்வர் ஆக்குங்கள்; கூச்சலிட்டு பலனில்லை - வானதி சீனிவாசன்! - VANATHI SRINIVASAN

அம்பேத்கர் மீது உண்மையான மரியாதை இருந்தால் பட்டியலினத்தைச் சேர்ந்தவரை திமுக துணை முதலமைச்சராக்க வேண்டும் என பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 19, 2024, 1:26 PM IST

கோயம்புத்தூர்: நாடாளுமன்ற மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதை திரித்து அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் ஈடுபட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது என பாஜக மகளிர் அணியின் தலைவரும், கோவை தெற்கு பாஜக சட்ட மன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் டிசம்பர் 17 ஆம் தேதி நடந்த அரசியல் சாசனம் மீதான விவாதத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, "தற்போது 'அம்பேத்கர், அம்பேத்கர்' என்று பேசுவது பேஷனாகி விட்டது. இதற்கு பதிலாக கடவுளின் நாமத்தை பல முறை உச்சரித்திருந்தால், அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும்" என்று பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் நேற்று (டிசம்பவர் 18) புதன்கிழமை நாடாளுமன்றத்திற்கு வெளியே அம்பேத்கர் படத்தை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (டிச.19) வியாழக்கிழமை தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. இந்த நிலையில், அம்பேதகர் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதை திரித்து அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளது என பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கொடுக்கும் இடத்திற்கு மறுப்பா?

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பட்டியலின மக்களுக்கு அரசியல் அதிகாரம் தேவை. அதுவே அவர்களுக்கு உண்மையான விடுதலை. ஆனால், காங்கிரஸ், திமுக பட்டியலின மக்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்க மறுக்கிறது. பட்டியலின மக்களை தொடர்ந்து வாங்கும் இடத்திலேயே வைத்திருக்க விரும்புகிறது. கொடுக்கும் இடத்திற்கு வர விடுவதில்லை.

அம்பேத்கர் மீது திமுகவுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் மதிப்பும், மரியாதையும் இருந்தால் உடனடியாக பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை துணை முதலமைச்சராக்க வேண்டும். திமுக பொதுச்செயலாளராக, அமைச்சர்களாக பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும். உள்துறை அமைச்சர் பேசியதை திரித்து வெற்றுக் கூச்சல் போடுவதில் பிரயோஜனமும் இல்லை.

அரசியலமைப்புச் சட்டத்தின் 75-வது ஆண்டைக் குறிக்கும் விவாதத்தில், மாநிலங்களவையில் டிசம்பர் 17 ஆம் தேதி உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் அவர்களின் பெயரை கூறி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்காமல் ஏமாற்றி வரும் இந்தியா கூட்டணி கட்சிகளை அம்பலப்படுத்தினார்.

ஒடுக்கப்பட்டவர்களுக்கு அரசியல் அதிகாரம்:

அம்பேத்கரை தேர்தலில் தோற்கடித்த கட்சி காங்கிரஸ். அவருக்கு தேர்தல் ஏஜெண்டாக பணியாற்றி கட்சி ஜனசங்கம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது, ஜவஹர்லால் நேருவும், இந்திரா காந்தியும் தனக்கு தானே, 'பாரத் ரத்னா' விருது கொடுத்து கொண்டனர். அம்பேத்கருக்கு 'பாரத் ரத்னா' விருது கொடுக்க இந்தியாவை 55 ஆண்டுகள் ஆண்ட காங்கிரஸ் கட்சிக்கு மனமில்லை. 1990ல் பாஜக ஆதரவுடன் அமைந்த ஆட்சியில்தான் அம்பேத்கருக்கு 'பாரத் ரத்னா' விருது வழங்கப்பட்டது.

2014ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு அம்பேத்கர் தொடர்புடைய ஐந்து இடங்களை நினைவிடங்களாக மாற்றப்பட்டுள்ளது. அம்பேத்கரை உண்மையிலேயே மதிப்பவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்க வேண்டும். பாஜக மூன்று முறை சிறுபான்மை, பட்டியலினம் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களை குடியரசுத் தலைவராக தேர்வு செய்துள்ளது.

இதையும் படிங்க: "உண்மைகளை திரித்து கூறும் காங்கிரஸ்"-அம்பேத்கர் விமர்சனம் குறித்து அமித்ஷா விளக்கம்!

மத்திய அமைச்சரவையில் பட்டியலின, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருப்பது மோடி அரசில்தான். காங்கிரஸ் நினைத்திருந்தால் 2004, 2009ல் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை பிரதமர் ஆக்கியிருக்கலாம். ஆனால், வாய்ப்பிருந்தும் அதைச் செய்யவில்லை. மகன் உதயநிதியை துணை முதலமைச்சராக்கியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதுதான் அம்பேத்கரை மதிப்பதா?," இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.