குல்காம்: ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது நடைபெற்ற என்கவுண்டரில் ஐந்து தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பாதுகாப்புபடையினர் காயம் அடைந்தனர்.
குல்காம் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த பகுதிக்கு விரைந்த சிஆர்பிஎஃப், ராணுவம், ஜம்மு-காஷ்மீர் போலீசார் உள்ளிட்டோர் அடங்கிய பாதுகாப்பு படையினர் வியாழக்கிழமை அதிகாலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
#Encounter has started at Kadder area of #Kulgam district. Police and security forces are on the job. Further details shall follow.@JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) December 19, 2024
அப்போது பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப்படையினரை நோக்கி சுட்டதால், தற்காப்புக்காக பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுண்டரில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். இது குறித்து பேசிய பாதுகாப்புப்படை அதிகாரி ஒருவர், "பாதுகாப்புப்படையினர் பழத்தோட்டப் பகுதியில் குறிப்பிட்ட இடத்தை கண்டுபிடித்ததும், பதுங்கியிருந்த இடத்தில் இருந்த தீவிரவாதிகள் சுட ஆரம்பித்தனர். எனவே பதிலடி கொடுக்கும் வகையில் என்கவுண்டர் நடத்தப்பட்டது. பழத்தோட்டத்தில் கிடைக்கும் ஐந்து தீவிரவாதிகளின் உடல்கள் இன்னும் கைப்பற்றப்படவில்லை," என்று கூறினார்.
தீவிரவாதிகளை கட்டுப்படுத்தும் நடவடிககையாகவே பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். இன்னும் இரண்டு முதல் மூன்று தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்று தெரிகிறது. தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. காஷ்மீர் மண்டல காவல்துறையினர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "குல்காம் மாவட்டம் காதர் பகுதியில் என்கவுண்டர் தொடங்கியது. போலீசார் உள்ளிட்ட பாதுகாப்புப்படையினர் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். விரிவான விவரங்கள் பின்னர் தெரியவரும்,"என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மதுரையில் லஞ்சம் வாங்கிய ஜிஎஸ்டி துணை ஆணையர் கைது? திருவிடைமருதூர் வீட்டில் சிபிஐ சோதனை!
இந்திய ராணுவத்தின் சினார் கார்ப்ஸ் தரப்பில், "பதுங்கியிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப்படையினரை நோக்கி தீவிரமாக தாக்கினர். எனவே பாதுகாப்புப்படையினர் தரப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டது," என்று கூறப்பட்டுள்ளது.
"தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது குறித்த குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில் குல்காம் மாவட்டத்தில் காதர் ஆபரேஷன் மேற்கொள்ளப்படுகிறது. இந்திய ராணுவம், ஜம்மு-காஷ்மீர் போலீஸ் ஆகியோர் இணைந்த கூட்டு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு படையினர் சந்தேகத்துக்கு இடமான நடவடிக்கைகளை அறிந்தனர். எனவே தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இரண்டு குழுக்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். தொடர்ந்து ஆபரேஷன் நடைபெற்று வருகிறது," என எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளது.
OP KADER, Kulgam
— Chinar Corps🍁 - Indian Army (@ChinarcorpsIA) December 19, 2024
On 19 Dec 24, based on specific intelligence input regarding presence of terrorists, a Joint Operation launched by #IndianArmy & @JmuKmrPolice at Kader, Kulgam. Suspicious activity was observed by vigilant troops and on being challenged, terrorists opened… pic.twitter.com/9IxVKtDZkl
ஸ்ரீநகர் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 3ஆம் தேதி ஜூனைத் அகமது பட் என்ற தீவிரவாதி பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். கந்தர்பால் ககாங்கீர் பகுதியில் பொதுமக்கள் கொல்லப்பட்டது உட்பட ஜம்மு-காஷ்மீரில் நடந்த பல்வேறு தீவிரவாத தாக்குதலில் ஜூனைத் அகமது பட்டுக்கு தொடர்புள்ளது
இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இன்று உயர்மட்டக் குழு கூட்டத்தை கூட்டி விவாதிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. முக்கியமான பாதுகாப்பு விஷயங்கள், ஜம்மு-காஷ்மீர் நிலவரம் உள்ளிட்டவை இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவும் பங்கேற்கிறார். காஷ்மீர் பகுதியில் அமைதியை ஏற்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.