ETV Bharat / state

பதைபதைக்கும் சிசிடிவி காட்சி: ஜமைக்கா நாட்டில் நெல்லை இளைஞர் சுட்டுக்கொலை! - JAMAICA FIRING INCIDENT CCTV

ஜமைக்கா நாட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் திருநெல்வேலியைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் மார்க்கெட்டில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர்கள்
சூப்பர் மார்க்கெட்டில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர்கள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 19, 2024, 2:41 PM IST

திருநெல்வேலி: ஜமைக்கா நாட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் நெல்லையைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ள நிலையில், அவரது உடலை தாயகம் கொண்டுவர உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், சூப்பர் மார்க்கெட்டில் நடத்திய துப்பாக்கி சூடு குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்கா அருகில் உள்ள ஜமைக்கா நாட்டின் பிராவிடன்ஸ் தீவில், லீ ஹை ரோடு (Lee High Road) என்ற இடத்தில், தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சார்ந்த சுபாஷ் அமிர்தராஜ் என்பவர், ஜேகே ஃபுட் (JK Food) சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இதில், திருநெல்வேலியைச் சேர்ந்த விக்னேஷ், சுந்தரபாண்டி, சுடலை மணி, ராஜாமணி ஆகிய 4 பேர் பணியாற்றி வந்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு:

இந்த நிலையில், இந்திய நேரப்படி நேற்று நேற்று (டிசம்பர் 18) புதன்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் (ஜமைக்கா நேரப்படி மாலை 3 மணி) சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பணம் மற்றும் மளிகை பொருட்களை கொள்ளையடிப்பதற்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: கோவை குண்டுவெடிப்பு கைதி பாஷா உடல் அடக்கம்; சீமான் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி!

இதில் விக்னேஷ் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், இருவர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியது.

சிசிடிவி வெளியீடு:

இந்நிலையில், சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூடு தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதில், கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் சூப்பர் மார்க்கெட் ஊழியர்களை மிரட்டி பொருட்களை கொள்ளையடிப்பதும், துப்பாக்கியால் சரமாரியாக சுடுவதும் பதிவாகியுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடந்த பல்பொருள் அங்காடியில் பதிவுசெய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் (ETV Bharat Tamil Nadu)

மேலும், துப்பாக்கிச் சூடு நடைபெற்ற போது காயமடைந்த இளைஞர்கள் கதறி அழும் காட்சிகள் காண்போரை பதை பதைக்க வைக்கிறது. இந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விக்னேஷின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனிடம், உயிரிழந்த விக்னேஷின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மனு அளித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.