தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு; மூளையாக செயல்பட்ட இருவர் அதிரடி கைது! - Rameshwaram Cafe blast case - RAMESHWARAM CAFE BLAST CASE

Rameshwaram Cafe blast: ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படு வந்த அத்புல் மதீன் தாஹா மற்றும் முசாவிர் ஹுசைன் ஷாசெப் ஆகியோர் கொல்கத்தா அருகே என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 12, 2024, 2:25 PM IST

பெங்களூரு:கர்நாடக மாநிலம், பெங்களூருவில் செயல்பட்டு வரும் பிரபல ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில், கடந்த மார்ச் 1ஆம் தேதி குண்டுவெடித்தது. இதில், உணவகப் பணியாளர்கள் உட்பட பலர் காயமுற்றனர். இந்த சம்பவம் பெங்களூரு மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இந்த குண்டுவெடுப்பு சம்பவம் தொடர்பான வழக்கை கடந்த மார்ச் 3ஆம் தேதி தேசிய புலனாய்வு முகமை (National Investigation Agency - NIA) விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய என்ஐஏ, குண்டுவெடிப்பை நடத்திய முக்கிய குற்றவாளியான முசாவிர் ஹுசைன் ஷாஜிப் (30) மற்றும் வேறு சில வழக்குகளில் ஏஜென்சியால் தேடப்படும் மற்றொரு குற்றவாளியான அப்துல் மதீன் அகமது தாஹாவையும் (30), ஏற்கனவே அடையாளம் கண்டது. மார்ச் 26ஆம் தேதியன்று இச்சம்பத்தில் முக்கிய குற்றவாளிக்கு தளவாட உதவிகள் வழங்கிய குற்றச்சாட்டில் சிக்கமகளூருவின் கலாசா பகுதியைச் சேர்ந்த முஸாமில் ஷெரிப் என்பவரை என்ஐஏ கைது செய்தது.

ஆனால், முக்கிய குற்றவாளிகளான இருவரும் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக மார்ச் 29ஆம் தேதியன்று கர்நாடகா, தமிழ்நாடு, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 18 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது தவிர குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய இந்த இரண்டு முக்கிய குற்றவாளிகள் பற்றிய தகவலை தெரிவிப்பவர்களுக்கு, தலா ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என என்ஐஏ அறிவித்தது.

இந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிற்கு அருகிலுள்ள பகுதியில் பதுங்கி இருந்த முசாவிர் ஹுசைன் ஷாஜிப் மற்றும் அப்துல் மதீன் அகமது தாஹாவை என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். இது தொடர்பாக என்ஐஏவின் அதிகார தகவல் இன்னும் வெளியாகவில்லை. கைது செய்யப்பட்டுள்ள முசாவிர் ஹுசைன் ஷாஜிப் தான் ராமேஸ்வரம் கஃபேயில் குண்டு வைத்தவர் என்றும், அப்துல் மதீன் அகமது தாஹா இச்சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர் என்றும் என்ஐஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க:தெலங்கானா எம்எல்சி கவிதா கைது! திகார் சிறையில் வைத்து சிபிஐ கைது! மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் விசாரணை! - Delhi Liquor Scam

ABOUT THE AUTHOR

...view details