டெல்லி: கனடாவில் உள்ள இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் அமைப்பினர் தாக்குதல் நடத்திய வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு பஞ்சாபில் சோதனையிட்டு வருகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு, மார்ச் 23-ஆம் தேதி அன்று கனடாவின் ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே காலிஸ்தான் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
இதையும் படிங்க:சிபிஐ வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.. சிறையில் இருந்து வெளியே வருவது எப்போது?
அப்போது, போராட்டக்காரர்கள் இந்தியாவுக்கு எதிரான கோஷத்தை எழுப்பியதுடன், தூதரகத்தின் சுவர்களில் காலிஸ்தானி கொடிகளைக் கட்டி, அலுவலகத்துக்குள் இரண்டு கையெறி குண்டுகளை வீசினர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பஞ்சாபில் என்ஐஏ சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்