புதுடெல்லி: எல்லைப்பகுதியில் மோதல் முடிவுக்கு வந்ததையடுத்து கிழக்கு லடாக் அருகே குவிக்கப்பட்டிருந்த இரண்டு நாடுகளின் ராணுத்தின் படைகளும் விலக்கிக் கொளப்பட்டுள்ளன.இந்த நிலையில் டெம்சோக் பகுதியில் இந்திய ராணுவம் தமது வழக்கமான ரோந்து பணியைத் தொடங்கியது.
கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாடு கோடு அருகே கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவம் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியா தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. இதனால் எல்லை பகுதியில் பதற்றம் நிலவியது.
எனவே இந்தியா-சீனா இடையே பதற்றத்தை தணிக்கும் வகையில் தூதரக ரீதியாகவும்,ராணுவ ரீதியாகவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து கிழக்கு லடாக் பகுதியில் இருதரப்பிலும் குவிக்கப்பட்டுள்ள படைகளை விலக்கிக் கொள்வது என இருநாடுகளும் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி ஒப்பந்தம் செய்தன.
ஒப்பந்தத்தின்படி இருநாட்டு படைகளும் கடந்த அக்டோபர் 29ஆம் படைகளை விலக்கிக் கொண்டன. தீபாவளியை முன்னிட்டு உண்மையான கட்டுப்பாட்டு கோடு அருகே இந்திய-சீன ராணுவப்படையினர் பரஸ்பரம் இனிப்புகளைப் பரிமாறிக்கொண்டனர். இதையடுத்து இந்திய ராணுவம் இன்று டெம்சோக் பபகுதியில் தமது வழக்கமான ரோந்துப்பணியைத் தொடங்கியது. இதே போல கிழக்கு லடாக்கில் உள்ள டெப்சாங் சமவெளி பகுதியிலும் விரைவில் இ்ந்திய ராணுவம் ரோந்துப் பணியில் ஈடுபடும் என்று ராணுவ வட்டாரத்தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்