ETV Bharat / entertainment

'விடுதலை 2' படத்தை கடுமையாக விமர்சித்த அர்ஜூன் சம்பத்திற்கு பி.சி.ஸ்ரீராம் பதிலடி! - PC SREERAM VS ARJUN SAMPATH

Viduthalai 2: 'விடுதலை 2' படம் குறித்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் வெளியிட்ட விமர்சனத்திற்கு ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் பதிலடி கொடுத்து பதிவிட்டுள்ளார்.

விடுதலை 2 போஸ்டர், பி.சி.ஸ்ரீராம்
விடுதலை 2 போஸ்டர், பி.சி.ஸ்ரீராம் (Credits - Film Posters, IANS)
author img

By ETV Bharat Entertainment Team

Published : 14 hours ago

சென்னை: ’விடுதலை 2’ குறித்து அர்ஜூன் சம்பத் கூறிய கருத்திற்கு ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் பதிலடி கொடுத்து பதிவிட்டுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘விடுதலை’ இப்படம் நடிகர் சூரியின் திரை வாழ்வில் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. ’விடுதலை’ படத்தில் கதாநாயகனாக நடித்த சூரி, தனது அசாத்தியமமான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றார். இதனைத்டொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார்.

இந்நிலையில் ’விடுதலை 2’ திரைப்படம் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் முதல் பாகத்தை ஒப்பிடுகையில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ’விடுதலை 2’ திரைப்படம் கம்யூனிஸம் பிரச்சாரம் போல உள்ளதாகவும் ஒரு சில விமர்சனங்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தனது எக்ஸ் தளத்தில் ’விடுதலை 2’ படத்தை கடுமையாக விமர்சித்தார்.

அவரது பதிவில், “நக்சல் தீவிரவாதத்தை நியாயப்படுத்தியும், பெருமைப்படுத்தியும் வெளியாகியிருக்கின்ற விடுதலை திரைப்பட குழுவினர் மீது "உபா" பாய வேண்டும். முக்கியமாக அதை வெளியிட்டிருக்கின்ற ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மீது ஆயுதம் தாங்கிய பயங்கரவாதத்தை சகஜப்படுத்துகின்ற இத்திரைப்படத்தின் மீது என்.ஐ.ஏ கவனம் செலுத்த வேண்டும்” என பதிவிட்டிருந்தார்.

மேலும், “காவல்துறையின் விசாரணை காவல் கொடுமைகளை அம்பலப்படுத்தும் மறைவில் நக்சல்வாதத்தையும் கௌரவப்படுத்துகிறார் திரைப்படத்தின் இயக்குநர் திரையரங்கை பிரச்சார மேடையாக மாற்றி தமிழக இளைஞர்கள் மத்தியில் பயங்கரவாதிகளை கதாநாயகன் ஆக்குகிறார்” எனவும் பதிவிட்டிருந்தார்.

இதையும் படிங்க: ”த்ரிஷயம் 3 உருவாக்க திட்டம்” - மோகன்லால் கொடுத்த மாஸ் அப்டேட்! - DRISHYAM 3

விடுதலை 2 திரைப்படம் குறித்து அர்ஜூன் சம்பத் வெளியிட்ட பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் அர்ஜூன் சம்பத்திற்கு பதிலடி கொடுத்து பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “நம்முடைய வரலாறு, பற்றியும், நிகழ்கால நிலை குறித்தும், எடுக்கப்பட்டுள்ள கிளாசிக் திரைப்படம் ’விடுதலை 2’. தயவு செய்து வளருங்கள், இதனை ஒரு கலைப் படைப்பாக பாருங்கள்” என தெரிவித்துள்ளார். இந்த பதிவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.