ETV Bharat / health

தாங்க முடியாத மாதவிடாய் வலியா?..இந்த 5 வீட்டு வைத்தியங்களை ஃபாலோ பண்ணுங்க! - MENSTRUAL CRAMPS

மாதவிடாய் நாட்களில் பெண்கள் எதிர்கொள்ளும் வலி மற்றும் அடிவயிற்று பிடிப்பை சமாளிக்க உதவும் சில எளிய வழிகளை காணலாம் வாங்க..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETV Bharat)
author img

By ETV Bharat Health Team

Published : 14 hours ago

இஞ்சி: மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை கட்டுப்படுத்த இஞ்சி உதவியாக இருக்கும். அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிஸ்பாஸ்மோடிக் பண்புகளை இஞ்சி கொண்டுள்ளதால், இது மாதவிடாய் வலியில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். அந்த வகையில், மாதவிடாயின் போது இஞ்சி டீ அல்லது சிறு இஞ்சி துண்டை மென்று சாறை முழுங்க பரிந்துரைக்கப்படுகிறது.

தூக்கம்: மாதவிடாய் காலத்தில் பெண்கள் கட்டாயமாக 8 மணி நேரம் தூங்க அறிவுறுத்தப்படுகிறது. மாதவிடாயின் போது நன்கு தூங்குவதால் ஹார்மோன் சமநிலையாக இருக்கும். இதனால், புத்துணர்ச்சியும் மன அமைதியும் பெறலாம். அதுமட்டுமல்லாமல், மாதவிடாய் காலத்தில் குறைவான நேரம் தூங்குவது அதிக வலியை உண்டாக்கும் எனவும் கூறப்படுகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETV Bharat)

ஹீட்டிங் பேட்: வயிற்று வலியைக் குறைக்க சுடான தண்ணீர் பாட்டில் அல்லது ஹீட்டிங் பேட்கள் உதவும். அடிவயிற்றில் ஹீட்டிங் பேட் வைத்து கொஞ்ச நேரம் உறங்குவதால் தசைகள் தளர்ச்சியடைந்து வலியை குறைக்கும். அதுமட்டுமல்லாமல், மாதவிடாய் நாட்களில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பதும் நல்ல பலன் தரும்.

சாக்லேட்: மாதவிடாய் நாட்களில் வலி மட்டுமல்லாமல், சிலர் கோபம், எரிச்சல், பதட்டம் போன்றவற்றாலும் அவதிப்படுவார்கள். இந்த மாதிரியான சூழலில், சாக்லேட் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. சாக்லேட்டில் உள்ள செரட்டோனின் எனும் வேதிப்பொருள் மனதை அமைதியாக மாற்ற உதவியாக இருக்கிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETV Bharat)

உணவில் கவனம்: மாதவிடாய் நாட்களில், நாம் சாப்பிடும் உணவும் வலியில் இருந்து நிவாரணம் பெற உதவும். தர்பூசணி, பீட்ரூட், ஆரஞ்சு போன்ற பலவகைகளும், வெண்டைக்காய், ப்ராக்கோலி போன்ற கீரை வகைகளும் வலியில் இருந்து நிவாரணம் பெற உதவும். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை இந்த நாட்களில் எடுக்க வேண்டாம் என பரிந்துரைக்கப்படுகிறது. நார்ச்சத்து உணவுகள் வயிறு வீக்கத்திற்கு காரணமாக மாறலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty Images)

இதையும் படிங்க:

தூங்குவதற்கு முன் முடியை பின்னுவதால் இவ்வளவு நன்மைகளா? இது தெரிஞ்ச ஃப்ரீ ஹேரில் தூங்க மாட்டீங்க!

தூங்கும் போதும் முடி உதிர்வா? கட்டாயம் பின்பற்ற வேண்டிய 5 விஷயங்கள் இதான்!

சூரிய நமஸ்காரத்தில் இவ்வளவு நன்மைகளா? தினசரி 3 முறை செய்தால் போதும்!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.