டெல்லி:இளங்கலை மருத்துவப் படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்து பாடப்பிரிவுகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு நேற்று (மே.5) நடைபெற்றது. நாடு முழுதும் ஏறத்தாழ 571 நகரங்களில் அமைக்கப்பட்ட 4 ஆயிரத்து 750 தேர்வு மையங்களில், 24 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.
இந்நிலையில், நீட் தேர்வு வினாத்தாள்கள் சட்டவிரோதமாக கசிந்ததாக தகவல் பரவியது. இந்த தவலை தேசிய தேர்வு முகமை மறுத்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள தேசிய தேர்வு முகமை, சமூக வலைதளங்களங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் அடிப்படை உண்மைக்கு புறம்பான ஒன்று எனத் தெரிவித்துள்ளது.
சமூக வலைதளங்களில் பரவும் வினாத் தாள்களுக்கும் உண்மையான வினாத்தாளுக்கும் தொடர்பில்லை என்றும் இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் சமூக வலைதளத்தில் கசிந்ததாக கூறப்படும் அறிக்கைகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
தேர்வு மையத்தின் நுழைவாயிலை மூடிய பிறகு யாராலும் உள்ளே வரவோ வெளியே செல்லவோ முடியாது எனவும் தேசிய தேர்வு முகமையின் பாதுகாப்பு சூழல்கள் மற்றும் கடைபிடிக்கப்படும் நிலையான இயக்க நடைமுறைகள் குறித்து சமூக வலைதளங்களில் பரவவிடப்படும் அனைத்து செய்திகளும் உண்மைக்கு புறம்பானவை என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு தேர்வு மையமும் சிசிடிவி கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் நிலையில், தேர்வு மையங்களில் வெளியாட்கள் அத்துமீறி நுழைவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வுக்கான ஒவ்வொரு வினாத்தாளுக்கும் நீட் தேர்வு முகமை கணக்கு வைத்திருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படங்கள் உண்மையான வினாத்தாள்களுக்கு சம்பந்தமற்றது என்றும் தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.
இதையும் படிங்க:கர்நாடக எம்பி ஆபாச வீடியோ வழக்கு: ஜாமீன் கோரி எச்.டி.ரேவண்ணா மீண்டும் மனுத் தாக்கல்! - Karnataka MP Prajwal Revanna Case