டோங்க் : மக்களவை தேர்தலை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள பிரதமர் மோடி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். டோங்க் பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பெண்களின் மாங்கல்யத்தை காங்கிரஸ் பறிக்க விரும்புகிறது என்றும், மக்களின் சொத்தை அபகரித்து, அதை குறிப்பிட்ட மக்களுக்கு பங்கிட காங்கிரஸ் கட்சி சதி செய்கிறது என்ற உண்மையை நாட்டு மக்கள் முன் வைத்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும் தனது பேச்சு ஒட்டுமொத்த காங்கிரஸ் மட்டும் இந்தியா கூட்டணி கட்சிகளை பயப்பட செய்து உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். ராஜஸ்தானுக்கு வருவதற்கு ஒருநாள் முன்பு சில உண்மைகளை தனது 90 விநாடி உரையில் தெரிவித்ததாகவும் அது காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியை நடுநடுங்க செய்து உள்ளதாகவும் மோடி குறிப்பிட்டார்.
நாட்டு மக்களின் சொத்துகளை கணக்கிட்டு அதை குறிப்பிட்ட மக்களுக்கு பங்கிட காங்கிரஸ் கட்சியின் சதித் திட்டம் குறித்த உண்மைகளை மக்கள் முன் தெரிவித்ததாகவும், எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கி மற்றும் அவர்கள் யாரை சமாதானப்படுத்த இதை செய்க்கிறார்கள் என்ற உண்மையை தான் வெளிப்படுத்தியதாகவும் எவ்வாறாயினும் காங்கிரஸ் கட்சி ஏன் உண்மையை கண்டு அஞ்சுகிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
2014க்குப் பிறகு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்றும் பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். மேலும், 2014ல் தன்னை மத்தியில் பணியாற்ற மக்கள் அனுமதித்ததாகவும் அதன் பின் நாடு நினைத்து கூட பார்த்திராத பல்வேறு வளர்ச்சிகளை கண்டதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
2014ஆம் ஆண்டுக்கு பிறகும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நீடித்து இருந்தால் ஜம்மு காஷ்மீரில் இன்றளவும் நமது ராணுவ படைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கும், சமூக விரோதிகள் எல்லை தாண்டி நம் நாட்டுக்குள் ஊடுருவி இருப்பர், ராணுவ வீரர்களுக்கு ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் என்ற நிலை இருந்திருக்கும். முன்னாள் ராணுவ வீரர்கள் 1 லட்சம் கோடி ரூபாயை பெற்று இருக்க மாட்டார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
அரசியலமைப்பு அவர்களுக்கு முற்றிலும் எதிராக உள்ளது. இடஒதுக்கீடு பெறும் உரிமையை தலித்துகள், பின்தங்கிய வகுப்பை சேர்ந்த மக்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு பாபா சாகேப் அம்பேத்கர் வழங்கி இருந்தார். ஆனால் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி மத அடிப்படையில் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்க விரும்புவதாக பிரதமர் மோடி கூறினார்.
இதையும் படிங்க :5 ஆண்டுகளில் 41% அதிகரித்த ஜெகன் மோகன் சொத்து மதிப்பு! சந்திரபாபு நாயுடுவின் சொத்து ராக்கெட் வேகத்தில் உயர்வு! - Lok Sabha Election 2024