கவுகாத்தி : அசாம் மாநில அரசு மற்றும் மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு உள்ள 11 ஆயிரத்து 599 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் முடிவு பெற்ற திட்டப்பணிகளை தலைநகர் கவுத்தியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கும் அடிக்கலும் நாட்டினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, பிராந்தியங்களுக்கு இடையிலான இணைப்பை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிப்பது, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் இளைஞர்களை ஊக்குவிப்பது உள்ளிட்ட பணிகளை அரசு மேற்கொண்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும், நாட்டில் கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது மற்றும் ஊக்குவிப்பதற்கான பணியில் தனது அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார். சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பது மூலம் நாட்டில் பல ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் அதிகரிக்க முடியும் என பிரதமர் மோடி கூறினார்.
வடகிழக்கு பகுதிகளை ஒன்றிணைக்கும் கமாக்யா வழிதடத்தை கட்டமைப்பதை மத்திய அரசு எதிர்நோக்கி உள்ளதாகவும் அதன் மூலம் நாட்டின் சுற்றுலா துறையை மேம்படுத்த முடியும் என்றும் பிரதமர் மோடி கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் வடகிழக்கு பகுதிகளில் வரலாறு காணாத அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளதாக கூறினார்.