போபால் (மத்தியப் பிரதேசம்):மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில், ஜஹாங்கிராபாத் பகுதியில் ஃ பராஸ் என்ற அந்த இளைஞர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பி.எஸ்சி பட்டதாரியான அவர், வேலை கிடைக்காததால் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது.
வேலையில்லாத விரக்தியில் இருந்து வந்த இளைஞரை, அவரது குடும்பத்தினர் கேலி, கிண்டல் செய்து வந்ததுடன், சீக்கிரம் ஒரு வேலையை தேடிக் கொள்ளும்படி ஃபராஸை கட்டாயப்படுத்தியுள்ளனர்.
ஏற்கெனவே மனஅழுத்தத்தில் இருந்த அவர், குடும்பத்தினர் கொடுத்த அழுத்தத்தால் ஆத்திரமடைந்துள்ளார். அந்த ஆத்திரம் கண்ணை மறைக்கவே, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த தனது சகோதரியின் மூன்று வயது மகளின் தொண்டைக்குழியில் கத்தியால் குத்தி அச்சிறுமியை கொன்றுள்ளார்.