தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஓய்ந்தது 2ம் கட்ட தேர்தல் பரப்புரை; 88 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு! - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024 Phase 2 election: மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் இன்று மாலையுடன் தேர்தல் பரப்புரை ஓய்ந்த நிலையில் 88 தொகுதிகளில் நாளை மறுநாள் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 24, 2024, 5:35 PM IST

ஐதராபாத்: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இதில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதல் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து ஏப்ரல் 26ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற உள்ளன.

இரண்டாம் கட்டத் தேர்தல்

இரண்டாம் கட்டத் மக்களவை தேர்தலில் அசாம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜம்மு & காஷ்மீர் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 88 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்று (ஏப்.24) மாலை 6 மணியுடன் 12 மாநிலங்களில் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.

இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அசாமில், பீகாரில் தலா 5 இடங்களிலும், சத்தீஸ்கரில் 3 இடங்களிலும், கர்நாடகாவில் 14 இடங்களிலும், கேரளாவில் 20 இடங்களிலும், மத்தியப் பிரதேசத்தில் 6 இடங்கள், மகாராஷ்டிராவில் 8 இடங்கள், மணிப்பூரில் ஒன்று, ராஜஸ்தானில் 13 இடங்களிலும், திரிபுரா 1 இடம், உத்தர பிரதேசத்தில் எட்டு இடம், மேற்கு வங்கத்தில் மூன்று இடம் மற்றும் ஜம்மு & காஷ்மீரில் ஒரு தொகுயிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இரண்டாம் கட்டத் தேர்தல்

நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள்:

கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். கடந்த 2019ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்ட ராகுல் காந்தி, அதில் வயநாடு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றார்.

ராகுல் காந்தியால் மட்டுமின்றி இந்த முறை வயநாடு தொகுதி மற்ற வேட்பாளார்களாலும் நட்சத்திர தொகுதியாக அறியப்படுகிறது. ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக கேரள மாநில தலைவர் கே.சுரேந்தரன், மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி ராஜாவின் மனைவி ஆனி ராஜா ஆகியோரும் வயநாடு தொகுதியில் இந்த முறை களம் காணுகின்றனர். மும்முனை போட்டி காரணமாக வயநாடு இந்த முறை தேசிய அளவில் கவனம் ஈர்த்து உள்ளது.

அதைத் தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியிலும், அவரை எதிர்த்து பாஜக சார்பில் ராஜீவ் சந்திரசேகரும் திருவனந்தபுரத்தில் போட்டியிடுகிறார். பாலிவுட் நடிகை ஹேமாமாலினி மதுரா தொகுதியிலும், முன்னாள் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகெல் ராஜ்நந்த்கான், டிகே சுரேஷ் பெங்களூரு ரூரல் மற்றும் தேஜஸ்வி சூர்யா பெங்களூரு தெற்கு தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

இது தவிர மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஜோத்பூர் தொகுதியிலும், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கோடாவிலும், வச்சித் பகுஜான் அகாதி அமைப்பின் தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் அகோலா மற்றும் மேற்கு வங்க பாஜக தலைவர் சுகந்த மஜும்தர் பலூர்கட் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது :

இரண்டாவது கட்ட மக்களவை தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் இன்று (ஏப்.24) மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இன்று இறுதி நாள் என்பதால், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அனல் பறக்கும் பிரசாரத்தை மேற்கொண்டனர். இனி அடுத்த 48 மணி நேரத்திற்கு தேர்தல் தொடர்பான எந்தவொரு பொதுக்கூட்டமோ, ஊர்வலமோ நடத்தக் கூடாது.

அதுமட்டுமில்லாமல் சமூக வலைத்தளங்களிலோ, தொலைக்காட்சி மற்றும் ரேடியோ மூலமாகவோ கூட தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது. அப்படி விதிகளை மீறினால் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் எச்சரித்து உள்ளது.

இதையும் படிங்க :"பிரதமருக்கு எதிராக வாரணாசியில் போட்டியிடுவோம்"- மத்திய அரசுக்கு தமிழக விவசாயிகள் எச்சரிக்கை! - TN Farmers Delhi Protest

ABOUT THE AUTHOR

...view details