தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மக்களவைத் தேர்தல் 2024: நாடு முழுவதும் 102 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு! - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

தமிழகத்தில் 39 தொகுதிகள், உத்தரகாண்டில் 5 தொகுதிகள், ராஜஸ்தானில் 12 தொகுதிகள், உத்திர பிரதேசத்தில் 8 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகள், அசாம் மற்றும் மகாராஷ்டிராவில் தலா 5 தொகுதிகள், பீகாரில் 4 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகளிலும், மணிப்பூர், அருணாச்சல பிரதேசம், மேகாலயா ஆகிய இடங்களில் தலா 2 தொகுதிகளிலும், ஜம்மு காஷ்மீர், சத்தீஸ்கர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், மிசோரம், நாகலாந்து, புதுச்சேரி, சிக்கிம் மற்றும் லட்சத்தீவுகளில் 1 தொகுதியும் என 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 19, 2024, 10:49 AM IST

Updated : Apr 19, 2024, 11:34 AM IST

சென்னை:17-வது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஜூன் 16ஆம் தேதி நிறைவு பெறுவதைத் தொடர்ந்து 18-வது நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தல் ஏப்.19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று கடந்த மார்ச் 16ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்திலும், புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் பார்க்கையில், தமிழகம் உள்பட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 39 தொகுதிகள், உத்தரகாண்டில் 5 தொகுதிகள், ராஜஸ்தானில் 12 தொகுதிகள், உத்திர பிரதேசத்தில் 8 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகள், அசாம் மற்றும் மகாராஷ்டிராவில் தலா 5 தொகுதிகள், பீகாரில் 4 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகளிலும், மணிப்பூர், அருணாச்சல பிரதேசம், மேகாலயா ஆகிய இடங்களில் தலா 2 தொகுதிகளிலும், ஜம்மு காஷ்மீர், சத்தீஸ்கர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், மிசோரம், நாகலாந்து, புதுச்சேரி, சிக்கிம் மற்றும் லட்சத்தீவுகளில் 1 தொகுதியும் என 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. தமிழகத்தில் இதுவரை வன்முறை இன்றியே தேர்தல் நடந்துள்ளது. அதே போல் இம்முறையும் அமைதியான முறையில் தேர்தல் நடந்து வருகிறது.

10:45 AM பீகார் துணை முதலமைச்சர் வாக்களிப்பு:பீகார் மாநில துணை முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி பீகார் மாநிலம் லக்கான்பூரில் உள்ள பள்ளியில் வாக்களித்தார்.

10:22 AMராஜஸ்தான் முதலமைச்சர் வாக்களிப்பு:ஜெய்பூரில் உள்ள ஜகத்பூராவில் உள்ள பள்ளியில் ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா வாக்களித்தார்.

10:20 AM மேற்கு வங்காளத்தில் வன்முறைகள் பதிவு: மேற்கு வங்க மாநிலம் சந்த்மாரி கிராமத்தில் வாக்குப்பதிவை சீர் குலைக்கும் நோக்கில் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் வாக்களிப்பதைத் தடுப்பதற்காக திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொழிலாளர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியதாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். பாஜகவினர் பெகர்கட்டா மக்களை அச்சுறுத்தி வாக்களிக்க விடாமல் தடுத்ததாக திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். கூச்பேஹார் தொகுதியில் வன்முறை நடந்துள்ளதாக இரு கட்சியினரும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.

10:12 AM மேற்கு வங்கத்தில் கல் வீசி தாக்குதல்:மேற்கு வங்க மாநிலம் சந்த்மாரி கிராமத்தில் வாக்குப்பதிவை சீர் குலைக்கும் நோக்கில் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

9:50 AM உலகின் குள்ளமான பெண் வாக்களிப்பு: உலகின் குள்ளமான பெண்மணியாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த ஜோதி அம்கே, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தார்.

9:39 AM காலை 9 மணி வரை வாக்குப்பதிவு:அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 8.64%, அருணாச்சல பிரதேசம் 4.95%, அசாம் 11.15%, பீகார் 9.23%, சத்தீஸ்கர் 12.02%, ஜம்மு காஷ்மீர் 10.43%, லட்சத்தீவு 5.59%, மத்திய பிரதேசம் 14.12%, மகாராஷ்டிரா 6.98%, மணிப்பூர் 7.63%, மேகாலயா 12.96%, மிசோரம் 9.36%, நாகாலாந்து 8%, புதுச்சேரி 7.49%, ராஜஸ்தான் 10.67%, சிக்கிம் 6.63%, தமிழ்நாடு 8.21%, திரிபுரா 13.62%, உத்திரபிரதேசம் 12.22% உத்தராகாண்ட் 12.41%, மேற்கு வங்கம் 15.09%

9:30 AM மணிப்பூர் முதலமைச்சர் வாக்களிப்பு:மணிப்பூர் மாநிலம் இம்பாலின் கிழக்கில் உள்ள லுவாங்சங்பாம் மாமங்லைகாயில் உள்ள வாக்குச்சாவடியில் மணிப்பூர் முதலமைச்சர் என். பிரேன் சிங் வாக்களித்தார்.

8:58 Am உ.பியில் வாக்குப்பதிவு நிறுத்தம்: உத்திரபிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்தில் உள்ள ஜிஜிஐசி இன்டர் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளுக்குள் நுழைய விடாமல் போலீசார் தடுத்ததாக வாக்குச்சாவடி முகவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதனைத் தொடர்ந்து பிலிபிட்டில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

8:15 AM திரிணமுல் காங்கிரஸ் நபர்கள் மீது தாக்குதல்:மேற்கு வங்க மாநிலத்தில் பரோகொடலி ஜிபி, அலிபுர்துவாரில் உள்ள வாக்குச்சாவடி 226 மற்றும் 227 -இல் பாஜக நபர்கள் திரிணமுல் காங்கிரஸ் நபர்களை தாக்கியதாக திரிணமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இது குறித்து தனது எக்ஸ் வலைதளத்திலும் பதிவிட்டுள்ளது.

7:39 AM தன்னம்பிக்கையுடன் வாக்களிக்குமாறு அமித் ஷா வேண்டுகோள்!இது குறித்து தனது எக்ஸ் வலைதளத்தில், இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த கட்டத்தில் வாக்களிக்கும் அனைத்து வாக்காளர்களும் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் உங்களில் ஒவ்வொரு வாக்கும் பாதுகாப்பான, வளர்ந்த இந்தியாவை உருவாக்கும்.

7:14 AM மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வாக்களித்தார்.

7:10 AM பிரதமர் மோடி வாழ்த்து:சாதனை எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், 2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியம் பிரதேசங்களில் உள்ள 102 தொக்திகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ல நிலையில், இந்த தொகுதியில் வாக்களிக்கும் அனைவரும் தங்களது வாக்குரிமையை சாதனை எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக இளைஞர்கள், முதல் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும். ஒவ்வொருவரின் வாக்கும், குரலும் முக்கியமானது” என்று பதிவிட்டுள்ளார்.

7 AM வாக்குப்பதிவு தொடக்கம்:2024 மக்களவைத் தேர்தலுக்கான முதலாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு 21 மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் தொடங்கியது.

இதையும் படிங்க:மக்களவைத் தேர்தல் 2024: தமிழ்நாடு முழுவதும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு - Lok Sabha Election 2024

Last Updated : Apr 19, 2024, 11:34 AM IST

ABOUT THE AUTHOR

...view details