தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாலத்தில் இருந்து பேருந்து விழுந்து கோர விபத்து! 5 பேர் பலி! 30 பேர் படுகாயம்! - Odisha Bus Accident - ODISHA BUS ACCIDENT

ஒடிசாவில் பாலத்தில் இருந்து பேருந்து விழுந்த கோர விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 15, 2024, 10:59 PM IST

ஜஜ்பூர் :ஒடிசாவில் பாலத்தில் இருந்து பேருந்து விழுந்த விபத்தில் 5 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டு உள்ள நிலையில், 30 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர். ஒடிசா மாநிலம் ஜாஜ்பூரில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்று கொண்டு இருந்த பேருந்து பாலத்தில் இருந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த கோர விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details