டெல்லி: தலைமை நீதிபதியாக இருந்த டி.ஒய்.சந்திரசூட்டின் பதவிக்காலம் நவம்பர் 10ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் நவம்பர் 8ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பணியின் கடைசி வேலை நாளாக அவருக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் ஊழியர்கள் உற்சாகமான பிரியாவிடை அளித்தனர். இதைத் தொடர்ந்து சஞ்சீவ் கண்ணா உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்ற புதிய தலைமை நீதிபதி:புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற சஞ்சீவ் கண்ணா 1960ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி பிறந்தவர். இவர் டெல்லி பல்கலைக்கழகத்தின் வளாக சட்ட மையத்தில் சட்டம் பயின்றவர். இவர் முன்னாள் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தேவ் ராஜ் கண்ணாவின் மகனும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எச்.ஆர் கண்ணாவின் மருமகனும் ஆவார்.
நீதித்துறையில் அவர் பயணம்:இவர் 1983ஆன் ஆண்டு டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து, தனது வழக்கறிஞர் பயணத்தை டெல்லி தீஸ் ஹசாரி வளாகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் தொடங்கினார். பின்னர், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வரிவிதிப்பு, நடுவர் மன்றம், வணிகச் சட்டம், நிறுவனச் சட்டம், நிலச் சட்டம், சுற்றுச்சூழல் சட்டங்களில் தேர்ச்சி பெற்றவராக திகழ்ந்தார்.
இதைத் தொடர்ந்து, வருமான வரித்துறையின் அரசுத்தரப்பு மூத்த நிலை வழக்கறிஞராக நீண்ட காலம் பதவி வகித்தார். பின் 2004ஆம் ஆண்டில் டெல்லியின் அரசுத்தரப்பு சட்ட ஆலோசகராக (சிவில்) நியமிக்கப்பட்டார். 2005ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். இதைத் தொடர்ந்து 2006ஆம் ஆண்டில் டெல்லி உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இதையும் படிங்க:"இந்திய தொழில்துறைக்கு ரத்தன் டாடாவின் பங்களிப்பு என்றென்றும் ஊக்கமளிக்கும்" - பிரதமர் மோடி புகழாரம்!