ஹைதராபாத்: தெலங்கானா மற்றும் திரிபுரா உயர் நீதிமன்றங்களில் 2017 முதல் 2024 வரை 91,157 வழக்குகளை தீர்வு கண்டு சாதனை படைத்த நீதிபதி அமர்நாத் கவுட், தேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
அங்கீகாரம்:இந்த சாதனையை பாராட்டி, தெலங்கானா ஆளுநர் ஜிஷ்ணுதேவ் வர்மா, ஹைதராபாத்தில் உள்ள ராஜ் பவனில் நடந்த விழாவில், நீதிபதி கவுட்டுக்கு தேசிய சாதனைப் புத்தக சான்றிதழை வழங்கினார்.
பின்னணி:ஹைதராபாத்தைச் சேர்ந்த நீதிபதி அமர்நாத் கவுட், 2017-ஆம் ஆண்டு தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச கூட்டு உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றார். தினமும் சராசரியாக 109 வழக்குகளை தீர்வு செய்வதன் மூலம் அவர் பெயர் பெற்றார். 2021-ஆம் ஆண்டு அக்டோபரில் திரிபுரா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். 2022 நவம்பர் முதல் 2023 ஏப்ரல் வரை திரிபுராவின் தலைமை நீதிபதியாக பதவி வகித்த அவர், திரிபுராவில் 60 விழுக்காடு வழக்குகளையும், தெலுங்கானாவில் 40 விழுக்காடு வழக்குகளையும் தீர்வு செய்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்